இறுதிப் போரில் மக்கள் கொல்லப்பட்ட நினைவு நாள்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு; கொழும்பில் சிறப்பு பூஜை

படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமென வழிபாடு
பதிப்பு: 2018 மே 19 00:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 21 15:08
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க சிறப்பு பூஜை வழிபாடுகள் கொழும்பு பம்பலப்பிட்டி வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. ஒன்பது வருடங்களின் பின்னர் கொழும்பில் முதன் முதலாக இடம்பெற்ற வழிபாட்டில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.
 
கொழும்பில் அரசியலில் ஈடுபட்டு வரும் கலாநிதி குமரகுருபரன் உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரமுகர்களின் ஏற்பாட்டில், இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு அரசியலில் ஈடுபடும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களும் பொதுமக்களும் இந்த பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி யுத்தம் மிகவும் மோசமான முறையில் அழிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவில், முதன் முதலாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவு பூஜை வழிபாடுகள் எளிமையாக இடம்பெற்றதுள்ளது.

போரில் கொல்லப்பட்ட அனைத்து மக்களையும் நினைவு கூரும் வகையில் சிறப்பு தீப வழிபாடுகளும் இடம்பெற்றதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.

முதன் முதலாக இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகள் என்பதால், பிரமுகர்களின் உரைகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கும் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கும் நீதியான தீர்வு கடைக்க வேண்டும் என பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் தெரிவித்ததாக கூர்மை செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.