இந்தியா சிங்கப்பூர் உடன்படிக்கை

தொழிற் சங்கங்கள் கடும் எதிர்ப்பு, போராட்டம் நடத்த முடிவு

இந்திய சிங்கப்பூர் பணியார் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பு
பதிப்பு: 2018 மே 19 15:29
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 21 14:53
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை சிங்கப்பூர் அரசாங்கத்துடனான சுதந்திர வர்த்தக அபிவிருத்தி உடன்படிக்கை ஆகியவற்றுக்கு அரச மருத்தவர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 12 தொழிற் சங்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக கூர்மையின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.
 
சிங்கப்பூர் அரசாங்கத்துடனான சுதந்திர வர்த்தக அபிவிருத்தி உடன்படிக்கைக்கு எதிர்ப்ப வெளியிட்டு அரச மருத்துவர் சங்கம் கடந்த வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

மேற்படி இரண்டு உடன்படிக்கைகள் குறித்தும் அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லையானால் தொடர்ச்சியான போராட்டத்திற்கு அனைத்து தொழிற் சங்ககங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அரச மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது

இலங்கையில் உள்ள மூளைசாலிகளின் உழைப்புக்கு மைத்திரி ரணில் ஆட்சி மதிப்பு கொடுக்கவில்லை என்றும் இந்த இரண்டு உடன்படிக்கைகளும் ஆபத்தானது என்றும் அரச மருத்துவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதனுடான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் அடங்கிய இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை மிக விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய மத்தி அரசுடன் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடும் என கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக கூர்மையின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார். இந்த ஆண்டின் இறுதியில் உடன்படிக்கை செயற்படுத்தப்படும் என்றும் அந்த அதிகாரி நம்பிக்கை வெளியிட்டிருக்கிறாரம்.

இந்த உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி மைத்திரிபல சிறினே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசணையுடன் இலங்கை அரசின் உயர் மட்ட அதிகாரிகள் குழு ஒன்று புதுடில்லியில் கலந்துரையாடியுள்ளது.

அதேவேளை எட்கா உடன்படிக்கையின் மூலம் தகவல் தொழில் நுட்ப மற்றும் அதனூடான பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பணியாளர் வரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்ராலின் குற்றம் சுமத்தியுள்ளார்.