போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பு

யாழ் பிரபல தவில் வித்துவான் யமுனா ஏரியில் சடலமாக மீட்பு

கொலையா தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் விசாரணை
பதிப்பு: 2018 மே 19 23:22
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 21 14:47
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் இசை உலகின், பிரபல தவில் வித்துவான் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை யாழ் நல்லூர் யமுனா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ் கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.
 
ஜெயம் என அழைக்கப்படும், யாழ் செம்மணி வீதியைச் சேர்ந்த 66 வயதான இராமையா ஜெயராசா என்ற தவில் வித்துவானே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான இவர், கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போனதாக உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர்.

இந்த நிலையில், தவில் வித்துவான் ஜெயராசா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கொலையா, தற்கொலையா அல்லது விபத்துச் சம்பவமா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்று கூர்மை செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை யமுனா ஏரியில் பாதுகாப்பு வேலிகள் போடப்படவில்லை என்றும் முன்னரும் பலர் இந்த ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.