பெருந்தொகை நிதிக்கு நடந்தது என்ன?

மட்டக்களப்பில் கிராம அபிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியில் மோசடியா? அபிவிருத்திச் சங்கத் தலைவியின் கேள்வி

திறக்கப்பட்ட கற்கைநெறிக்கான நிலையம் மூடப்பட்ட நிலையில்
பதிப்பு: 2018 ஜூலை 14 19:42
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 14 22:36
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு அரசாங்கத்தினால் தமிழர் தாயகப்பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமங்களுக்கான அபிவிருத்தித் திட்டத்திற்கு கூடுதலான நிதி பயன்படுத்தப்பட்டாலும், கிராம மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை என கிராம மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி கணேஸ்வரன் பரமேஸ்வரி கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு கிராமத்தில், இலங்கைச் சுற்றாடல் அமைச்சின் கீழ் வரும் வனபரிபாலன திணைக்களகத்தினால், கண்டல் தாவர பாதுகாப்பு மற்றும் கற்கைநெறிக்கான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
 
ஆனால், கட்டடம் திறந்து வைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. எந்தவிதமான செயற்பாடுகளும் புதிய கட்டடத்தில் இருந்து மேற்கொள்ளவில்லை. கட்டடத்தைச் சுற்றிப் புல்லுகள் வளர்ந்துள்ளதாக கணேஸ்வரன் பரமேஸ்வரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் போர் மற்றும் சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நாசிவன்தீவு கிராமமும் ஒன்று.

நாசிவன்தீவு
மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு கிராமத்தில், இலங்கைச் சுற்றாடல் அமைச்சின் கீழ் வரும் வனபரிபாலன திணைக்களகத்தினால், திறந்து வைக்கப்பட்ட கண்டல் தாவர பாதுகாப்பு மற்றும் கற்கைநெறிக்கான நிலையம் இதுதான். ஆனால் இன்றுவரை செயற்படுத்தப்படாது மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

இவ்விரு சம்பவங்களினால், இந்தக் கிராமத்தில் கணவனை இழந்த பெண்கள் அதிகமாக வாழ்கின்றனர். அதுமட்டுமல்லாது நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலையின்றி உள்ளனர்.

இந்த நிலையத்தினுடாக குறிப்பிடத்தக்களவு இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கட்டடத் திறப்பு விழாவின் போது அதிகாரிகள் கூறியிருந்தனர்.

அதேபோன்று, கண்டல்த் தாவரங்களை பாதுகாப்பதன் மூலம் கிராமத்திற்கு நீரினால் ஏற்படும் பாதிப்புக்களையும் தவிர்க்க முடியும் எனவும் அதிகாரிகள் சொன்னார்கள்.

ஆனால், இன்று இக் கிராமத்தில் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. கிராமத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் இடம்பெறுமாயின் அது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஆனால், நல்ல நோகத்தோடு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறுவதாகத் தெரியவில்லைnயன கணேஸ்வரன் பரமேஸ்வரி கவலை வெளியிட்டார்.

இத்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன.

எனவே, இத்திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கரிசினை கொண்டு இப்பயிற்சி நிலையத்தை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் கிராம அபிவிருத்திக்கென ஒதுக்கப்படும் நிதி, சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்தும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.