அம்பாறை

கரையோரத்தில் போலி ஆவணங்களைக் காண்பித்து வீடு கட்ட முயற்சி- அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

கனரக வாகனங்களும் கைப்பற்றப்பட்டன
பதிப்பு: 2018 ஜூலை 17 12:37
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 17 15:39
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் மக்களின் தாயகமான அம்பாறை மாவட்டம் ஆலையடிவெம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் பகுதியில் கடற்கரையோரத்தில், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியின்றி தாவரங்களை அழித்து, மண்மேடுகளைச் சமப்படுத்தி கொட்டில் அமைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மண்மேடுகள் சமப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தகவல் வழங்கினர். அதனையடுத்து ஆலையடிவெம்பு பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு அதிகாரி கே.எஸ். பாபுஜி மற்றும் காணி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மண்மேடு சமப்படுத்தும் பணியை இடைநிறுத்தியதுடன், அனுமதிக் கடிதத்தையும் கோரினர். குறித்த நபர் காண்பித்த காணி உறுதிப் பத்திரம் தொடர்பாக அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
குறித்த நபர் காண்பித்த ஆவணம் தொடர்பாக மேலும் ஆராய வேண்டும் எனவும் கடற்கரையை அண்டிய பகுதியில் கொட்டில்கள் அமைப்பது, மண்மேடுகளைச் சமப்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டது.

மண்மேட்டைச் சமப்படுத்த பயன்படுத்தப்பட்ட கனரக வாகனமும் அக்கரைப்பற்றில் உள்ள இலங்கைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சாரதியும் கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த சிறிய கொட்டிலும் அகற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் அம்பாறையில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள், பொதுக் காணிகள், திட்டமிடப்பட்ட முறையில் சில குழுக்களினால் அபகாிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைப் பொலிஸாரின் உதவியுடன் மண் அகழ்ந்து எடுக்கப்பட்டு கொழும்புக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஏற்கனவே முறைப்பாடுகளும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.