மணிவண்ணன் தொடர்பான

நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்- சட்டத்தரணி காண்டீபன்

அதிகாரங்களை கொழும்புக்குத் தாரைவார்க்கும் தமிழரசுக் கட்சி
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 04 14:08
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 04 15:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகர சபையின் அமர்வுகளில் பங்கேற்க இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவில், சட்டப்பிழைகள் இருப்பதாக சட்டத்தரணி கான்டீபன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் குருநகர் இலக்கம் 19 சென் பற்றிக்ஸ் வீதி குருநகர் பிரதேசத்தில் வசிக்கும் ஸ்ரிபன்சன் றொனால்டன் என்ற வாக்காளர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் இந்த மனுதாரரின் சார்பில் முன்னிலையாகி வாதாடினார்.
 
மணிவண்ணன் யாழ் மாநாகர எல்லைக்குள் வசிப்பதில்லை என்றும் கொக்குவில் பிரதேசத்தில் வாழ்வதால், அவருடைய வாக்காளர் பதிவும் அங்குதான் இருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், யாழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்யக்கூடிய ஏற்பாடுகள் இருந்தும், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? அவதானிகள் கேள்வி.

இந்த மனுவை, சென்ற வியாழக்கிழமை விசாரணை செய்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ச்சுன ஒபயசேகர, பத்மன் சூரசேன ஆகியோர் யாழ் மாநகர சபையின் அமர்வுகளில் மணிவண்ணன் பங்கேற்க இடை்க்காலத் தடை விதித்தனர்.

இந்தத் தடை உத்தரவில், இறுதித் தீர்ப்பும் மாநகர சபையின் அமர்வுகளில் மணிவண்ணன் பங்கேற்க நிரந்தர தடைவிதிக்கப்படும் என்றே கூறப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தத் தீர்ப்பில் சட்டப்பிழைகள் இருப்பதாக காண்டீபன் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கவுள்ளது.

ஆனால் இறுதித் திர்ப்பு வழங்கப்பட முன்னர் இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக மணிவண்ணன் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இடைக்காலத் தீர்ப்பு ஒன்றில் இறுதித் தீர்ப்பும் இவ்வாறுதான் அமையும் என குறிப்பிட முடியாது என்றும் அதுவும் ஒருவருடைய பதவி நிலைசார்ந்த இடைக்கால தடை உத்தரவுகளில் அவ்வாறு கூற முடியதென்றும் காண்டீபன் தெரிவித்தள்ளார்.

மூத்த சட்டத்தரணி ஒருவரின் ஆலோசனையுடன் எதிர்மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு வாக்காளர் பதிவில், மணிவண்ணன் யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்கவில்லை என்று மனுதார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதிகாரப் பங்கீட்டை கோரும் நிலையில், அதிகாரப்பரவலாக்கத்தின் மூலம் இருக்கின்ற குறைந்த பட்ச அதிகாரங்களையும் தமிழரசுக் கட்சி ஏன் கொழும்புக்குத் தாரை வார்க்கிறது?

ஆனால், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினராக அங்கம் விக்கும் ஒருவர், அந்த சபையின் எல்லைக்குள்தான் தனது வாக்காளர் பதிவை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வாக்களர் பதிவு வேறு தொகுதியில் உள்ள ஒருவர் இன்னுமொரு தொகுதியில் உள்ள உள்ளூராட்சி சபையில் உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று கூற முடியாது.

அதுவும் மணிவண்ணன் தனது சட்டத்தொழில் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள யாழ் நகரத்துக்கு தினமும் வந்து செல்பவர்.

ஆகவே, யாழ் மாநகர சபையில் அவர் உறுப்பினராக பதவி வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனக் கூற முடியாது என்று சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, இ்ந்த விடயங்கள் குறித்த சட்டவியாக்கியானங்கள், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்குத் தவறான முறையில் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வழக்குகளை, 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக அந்தந்த மாகாணங்களில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தாக்கல் செயவதற்கான ஏற்பாடுகள் இருக்கும்போது, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எதற்காக மனுத் தாக்கல் செய்யப்பட்டது என்று கேள்விகளும் எழுகின்றன.

மாகாணங்களுக்கு அதுவும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர வேண்டும் என தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில், எந்த அடிப்படையில் மனுதார் சார்பில் சுமந்திரன் முன்னிலையாகினார் என அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாண சபை முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதிகாரப்பரவலாக்கமும் தீர்வாக அமையாது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அதிகாரப் பங்கீடு மாத்திரமே தீர்வாக அமையும்.

இந்த நிலையில், குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்களை கொழும்புக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகளில் தமிழரசுக் கட்சியின் மூத்த சட்டத்தரணிகள் ஏன் ஈடுபடுகின்றனர் என்றும் அவதானிகள் கேளவி தொடுத்துள்ளனர்.

இந்த மனுமீதான விசாரனையில், சட்டத்தரணிகளான காண்டீபன், விவேகானந்தன் புவிதரன் ஆகியோர் மணிவண்ணன் சார்பாக முன்னிலையாகின்றமை குறிப்பிடத்தக்கது.