கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

மாங்கேனியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை- பாதிக்கப்பட்டவர்கள் பரிதவிப்பு

நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 05 18:41
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 05 23:07
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில், காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் வறட்சியின் போது விவசாயிகள் பெரும்பாதிப்புக்களை எதிர்நோக்கியவர்களுக்கு எவ்விதமான நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை என மாங்கேணி விவசாய அமைப்பின் தலைவர் நா.உதயன் தெரிவித்தார். கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி பகுதியில் 450க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்காணி மழையை நம்பியதாக பெரும்போக செய்கை பண்ணப்பட்டது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் இப்பகுதியில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளும் பெரும் நட்டத்தை எதிர்நோக்கினர்.
 
ஓவ்வொரு குடும்பத்திற்கு 3 ஏக்கர் படி செய்கை பண்ணப்பட்டது. ஒரு ஏக்கர் செய்வதற்கு ஆகக் குறைந்தது 30 ஆயிரம் ரூபா செலவு ஏற்பட்ட போதிலும் அதிலிருந்து மிகவும் குறைந்தளவு வருமானமே கிடைத்தது.

எனினும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட உதவி விவசாய ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்திருந்தார்.

ஆனால் எட்டு மாதங்கள் கடந்தும் இதுவரையில் நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்படவில்லை என தலைவர் உதயன் உதயன் கூர்மை செய்தித்தலத்திற்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 3 ஏக்கர் செய்கை பண்ண எல்லாமாக ஒரு இலட்சம் ரூபா செலவு ஏற்பட்டுகிறது. ஆனால், நீர் ஒழுங்காக கிடைக்கும் பட்சத்தில் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வருமானமாக மூன்று மாதத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், இவ்வாறான வறட்சி பாதிப்புக்களினால் ஏற்படும் நட்டத்திற்கு நிவாரண உதவி என்ற போர்வையில் வெறும் 8 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படுகிறது.

எனவே, விவசாயிகளுக்கு ஏற்படும் செலவுகளைக் கருத்தில் கொண்டு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.