இலங்கைத் தலைநகர் கொழும்பில் வாழும்

தமிழர்களைப் பதிவு செய்யுமாறு இலங்கைப் பொலிஸாரால் படிவங்கள் கையளிப்பு- நிறுத்துமாறு அமைச்சர் மனோ உத்தரவு

ஆனால் அதிகாரபூர்வமான தகவல் இதுவரை இல்லை
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 06 18:48
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 06 19:34
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
போர்க்காலத்தைப் போன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாழும் தமிழர்கள் அனைவரும் அருகில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என இலங்கைப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகரில் ஈழத்தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய, மற்றும் கடற்கரைப் பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் தம்மை பதிவு செய்ய வேண்டும் என இலங்கைப் பொலிஸார் கூறியிருந்தனர். கடந்த சில தினங்களாக விண்ணப்படிவங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இது குறித்து அமைச்சர் மனே கணேசனிடம் முறையிடப்பட்டுள்ளது.
 
மக்களின் இந்த முறைப்பாடு தொடர்பாக இலங்கைப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் இன்று திங்கட்கிழமை தொடர்பு கொண்டு, அமைச்சர் மனோ கணேசன் விளக்கம் கோரினார்.

வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டிய அவசியம் இல்லையென இலங்கைப் பொலிஸார் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அமைச்சர் மனோ கணேசன் மாத்திரமே கூறியதாக மக்கள் கூறுகின்றனர்.

போர்க்காலத்தைப் போன்று மீண்டும் பதிவு செய்யும் முறையை அமூல்படுத்துகின்றீர்களா எனவும் எந்த நோக்கத்தின் அடிப்படையில் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டது எனவும் அமைச்சர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.

குடும்ப விபரங்களை எழுத்து மூலம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள், அசௌகரியங்கள் குறித்து மக்கள் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறித்தும் அமைச்சர் மனோ கணேசன், இலங்கைப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் எடுத்துக் கூறியிருந்தார்.

இதனால், பதிவு செய்யும் நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உறுதியளித்ததார் என்று அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

ஆகவே, வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களில் குடும்ப விபரங்கள் பற்றி நிரப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதிவு செய்யுமாறு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் எதனையும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் இதுவரை கூறவில்லை.

வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் இலங்கைப் பொலிஸார் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், பதிவு செய்ய வெண்டிய அவசியம் இல்லையென அமைச்சர் மனோ கணேசன் மாத்திரமே கூறியுள்ளாதாக மக்கள் கூறுகின்றனர்.

எனினும் பதிவு செய்யுமாறு வலியுறுத்தும் விண்ணப்பப் படிவங்கள் முழுமையாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதற்கிடையில் அமைச்சர் மனோ கணேசன் தலையிட்டு தடுத்து விட்டதாக கொழும்பு வாழ் ஈழத் தமிழர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

ஆனாலும், அவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இலங்கைப் பொலிஸாருக்கு ஏன் ஏற்பட்டது என்றும் அதற்கான உத்தரவை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு விடுத்ததிருந்ததா அல்லது இலங்கைப் பொலிஸார் தாமாகவே இந்த முடிவை எடுத்தார்களா என்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குடியிருப்பாளர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில், இலங்கைப் பொலிஸார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.