தாயகப் பிரதேசமான

யாழ். வட்டுக்கோட்டையில் இரவுவேளையில் மர்ம மனிதர்களின் நடமாட்டம்- அச்சத்துடன் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்

இளைஞர்கள் இரவில் காவல்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 07 16:41
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 07 16:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணவி, செட்டியார்மட பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு இந்த மர்ம மனிதர்களின் நடமாமட்டம் இருந்ததாகவும் இளைஞர்கள பதற்றத்துடன் வீதிகளில் நின்று காவல் புரிந்தாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் அராலியில் மிகவும் உயரம் குறைவான குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், வட்டுக்கோட்டையில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருந்தாகவும் மக்கள் கூறுகின்றனர். இந்த மர்ம மனிதர்கள் வீடுகளுக்கு கற்களை வீசியுள்ளனர். மக்களை அச்சுறுத்தும் வகையிலான சத்தங்களையும் எழுப்பியுள்ளனர்.
 
அச்சத்தின் மத்தியிலும் பிரதேச இளைஞர்கள் சிறிய ஒளி விளக்குகளுடன் சந்தேகமான பகுதிகளில் தேடுதல் நடத்தியுள்ளனர்.

ஆனாலும் எவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் செட்டியார்மட பிரதேசவாசி ஒருவர் கூறினார்.

இலங்கைப் பொலிஸாருக்கு அறிவித்தாலும் அவர்களின் செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த மர்ம மனிதர்கள், குள்ள மனிதர்கள் இரவில் நடமாடுவதற்கு இலங்கைப் படையினரின் ஒத்துழைப்பு இருப்பதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழ் அராலியில் குள்ள மனிதர்களை பிடிப்பதற்கு இரவில் காவலுக்கு நின்ற இளைர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு வீதியில் ரோந்து சென்ற இலங்கைப் பொலிஸார் கூறியிருந்தனர்.

அராலி பிரதேசத்தில் கடந்த வாரம் குள்ள மனிதர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மர்ம மனிதர்களினால் வீட்டு வேலி ஒன்றும் எரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வட்டுக்கோட்டை, அராலி பிரசேங்களிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் வாழும் இளைஞர்கள் குள்ள மனிதர்களையும் மர்ம மனிதர்களின் நடமாட்டங்களையும் பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.