கிழக்கு மாகாணத்தில்

தமிழ் இளைஞர் யுவதிகள் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபட வேண்டும்-பிரதேச சபைத் தவிசாளர்

தீய சக்திகளின் திட்டமிட்ட செயலை முறியடிக்குமாறும் வலியுறுத்தினார்.
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 07 20:49
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 07 22:32
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் வலிந்து ஊடுருவும் போதைப் போதைப்பொருள் பாவனையில் இருந்து தமிழ் இளைஞர் யுவதிகள் விடுபட வேண்டும். அதற்குரிய முறையில் விழித்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையின் தவிசாளர் சிவஞானம் கோணலிங்கம் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான சிந்தனைகளில் இருந்து திசை திருப்பும் நோக்க்கில், சில சக்திகள் போதைப் பொருள்பாவனையை ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். திட்டமுகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சும், தேசிய இளைஞர் சேவை திணைக்களகம், வாகரை பிரதேச இளைஞர் சம்மேளனமும் இணைந்து நடாத்திய இளைஞர் தலைமைத்துவ பயிற்சி நிறைவு நாளன்று, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
 
கோறளைப்பற்று வடக்கு வாகரை, கடந்த போர்க்காலங்களில் பல இழப்புக்களையும், பலருடைய தியாகங்களையும் எதிர்கொண்ட பிரதேசமாகும்

அன்றைய போர்க் காலகட்டங்களில் கிராமப்புறங்களில் வாழ்ந்த இளைஞர் யுவதிகள் எந்தவொரு தீய பழக்கவழக்கங்களுக்கும் அடிமைப்படவில்லை. ஆனால் இன்று வெளி இடங்களிலிருந்து பல தவறான பழக்கவழக்கங்கள் வாகரைப் பிரதேசத்தி்ற்குள் ஊடுருவியுள்ளன.

போதைப்பொருள் பாவனையை அடிப்படையாகக் கொண்டு இன்று தமிழர்களுடைய கலைகலாச்சாரம், வாழ்க்கை நடைமுறைகளையெல்லாம் சிதைத்து, தமிழ் பண்பாடாற்ற சமூகமாக மாற்றமடைய வைப்பது ஒரு சில தீய சக்திகளின் தேவைப்பாடாகவுள்ளது.

அவர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டுமானால், இந்தப் பிரதேசத்தில் இருக்கும் இளைஞர் யுவதிகள் விழிபுணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இப்பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் நேர்த்தியான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட வேண்டும். இவ்வாறான தலைமைத்துவப் பயிற்சிகளைப் பெற்று இளைஞர் யுவதிகள் ஆரோக்கியமான பல செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினரர். மூன்று நாட்கள் இடம்பெற்ற பயிற்சியில், வாகரைப் பிரதேசத்தில் இயங்கும் அனைத்து இளைஞர் களகங்களில் இருந்தும் 60 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.