மட்டக்களப்பு புல்லுமலைக் கிராமத்தில்

நிலத்தடி நீரை அகத்துறிஞ்சும் தொழிற்சாலையை உடனடியாக மூடுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம

கொழும்பு அரசியல் செல்வாக்குடன் இந்த ஏற்பாடு எனவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 09 20:10
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 11 11:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு அரசாங்கத்தின் தொடர்புடை அரசியல் கட்சிகள் சிலவற்றின் முக்கிய பிரமுகர்களின் செல்வாக்குடன், புல்லூமலை கிராமத்தில், நிலத்தடி நீரை அகத்துறிஞ்சும் தொழிற்சாலை ஒன்று அமைப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி கிராம மக்கள் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரிய புல்லூமலை கிராமத்தில் இன்று வியாழக்கிழமை காலை 10.30க்கு தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஐந்தாவது தடவையாக இந்தப் போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
 
தொழிற்சாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட போதிலும் அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள், தொழிற்சாலை கட்டடத்தை அமைக்க அனுமதி வழங்கிய ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் இறுதியில் மக்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் நிலக்கீழ் நீரை உறிஞ்சும் இத்தொழிற்சாலையை உடனடியாக மூடிவிட வேண்டும் எனத் தெரிவிக்கும் பொதுமக்களின் கருத்துக்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.