தேசத் துரோக வழக்கிற்கு முகாந்திரமில்லை என்று கூறி

நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் திருமுருகன் காந்தி தமிழக காவல்துறையால் மீண்டும் கைது

இந்திய மத்திய அரசாங்கத்தின் அழுத்தமா?
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 10 19:32
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 11 11:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இரண்டு மாதங்களுக்கும் மேலாக, ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு மனித உரிமை கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்தியாவுக்கு திரும்பும்போது பெங்களூர் விமான நிலையத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு, தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றம் சிறையில் வைத்திருக்க முகாந்திரம் இல்லையெனக் கூறி வழக்கை முடிவுறுத்தியது. தமிழக காவல்துறையும் விசாரணை முடித்து விடுவிடுப்பதாக, எழுத்து மூலம் அறிவித்தப்பின், மீண்டும் கைது செய்துள்ளது. 2017இல் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், தனது இயக்கத்தவர்களோடு ஒன்றாக சென்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததைத் தடை மீறி ஊர்வலம் என வழக்கு பதிவுசெய்து வைத்திருந்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
 
ஜேர்மனி மற்றும் சுவிசர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளரங்கக் கூட்டங்களில், தூத்துக்குடி காவல்துறைக் கலவரம் மற்றும் சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகள் தொடர்பாக விளக்கவுரை நிகழ்த்திய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் இந்தியவு்க்கு வரும்போது, கைது செய்யும் நடவடிக்கையை ரகசியமாக இந்திய மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழக காவல்துறை எடுத்திருந்தது.

அதன்பேரில், நேற்று ஓகஸ்து 9 ஆம் தகதி, பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய திருமுருகன் காந்தியை, குடிவரவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

19 மணி நேர தடுப்பிற்கு பின்னர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட தமிழக காவல்துறை, இரவு 10 மணிக்கு 400 கிமீ தொலைவில் உள்ள சென்னைக்கு சாலை வழியே பயணிக்கத் தொடங்கியது.

அதிகாலையிலேயே சென்னை கொண்டுவரப்பட்ட திருமுருகன் காந்தியின் இருப்பை, மே17 இயக்க உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் அவரது உறவினர் என யாருக்கும் தெரிவிக்கவில்லை.

இந்திய மத்தியஅரசின் சட்டம் 124A பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை தெரிவித்திருந்தது.

இதுகுறித்துப் பல கேள்விகள் கேட்ட நீதியரசர் பிரகாஷ், திருமுருகன் காந்தியை சிறைப்படுத்த முடியாது எனவும் மேலதிக விசாரணை செய்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளதாக வழக்க்றிஞர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இத்தீர்ப்புக் குறித்து வழக்குரைஞர் வெற்றிச்செல்வன், நீதிமன்றம் விடுதலை செய்யப் பரிந்துரைத்தாலும், இது போன்ற சூழல்களில் காவல்துறை அடுத்தடுத்து புதிய வழக்குகளையோ அல்லது நிலுவையில் உள்ள பழைய வழக்குகளின் பேரிலோ தொடர்ந்து சிறையில் வைத்திருக்கவே முயற்சிக்கும் என தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப, விசாரணை முடிந்ததாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியே வந்த திருமுருகனை, காவல்தூறையினர் சூழந்து கொண்டு மீண்டும் கைது செய்வதாக அறிவித்திருக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டம் 440/2017 u/s 143,188, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அடுத்த இரண்டு நாட்கள் நீதிமன்ற அலுவல் இயங்காது என்ற நிலையில், வெள்ளி மாலை கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில் நீண்ட நாட்கள் தங்கி அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதால், அங்கு கலந்து கொண்ட கூட்ட விவரங்கள், சந்தித்த நபர்கள், ஒருங்கிணைத்தவர்களின் விவரங்களை சேகரிக்கவே காவல்துறை திருமுருகன் காந்தியை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தமிழக ஊடகங்களில் பணியாற்றிய முன்னணி ஊடகவியலாளர் ஒருவர் கூர்மைச் செய்தித்தளத்திற்கு கருத்து தெரிவித்தார்.

இத்தகைய கைது குறித்து வழக்குரைஞர் சுந்தர் ராஜனிடம் கேட்டபொழுது, சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் மீதும் இது போன்ற பல வழக்குகள் காவல்துறையால் புனையப்பட்டு நீதிமன்றம் சிறைவாசம் உத்தரவை வழங்கியிருக்கிறது.

எண்ணற்ற சூழல்களில், காவல்துறை எந்த நேரத்திலும் யார் மீதும் தேச துரோக வழக்கும், தேசப் பாதுகாப்பு வழக்கும், தேசத்திற்கு எதிராக போர் தொடுக்கும் வழக்கும் இடுவது தொடர் கதையாகவே செல்கிறது.

மேற்கூறியவர்கள் அல்லாது, இது போன்ற புனையப்பட்ட வழக்குகளில் பொது மக்கள் பலருமே கூட சிறை சென்று சட்டப்போராட்டத்திற்கு பின் விடுதலை அடைந்துள்ளனர்.

அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கான தீர்வு நோக்கிய சட்டப் போராட்டங்களை இதுவரை முன்னெடுத்ததே இல்லை எனலாம் என்று வழக்குரைஞர் சுந்தர் ராஜன் கூறினார்.