திருமுருகன் காந்தியை

விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்- இந்திய மத்திய அரசின் மீதும் கண்டனம்

தமிழக பொலிஸாரின் திட்டமிட்ட நடவடிக்கை என்றும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 11 11:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 11 15:14
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத்தமிழருக்காக ஜெனிவாவில் குரல் கொடுத்துவரும் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி தமிழக பொலிஸாரினால் நீதிமன்ற உத்தரவையும் மீறி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. தூத்துக்குடியில் நீதிகேட்டு போராடியமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் உறவுகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். தேசத் துரோக குற்றச்சாட்டில் திருமுருகன் காந்தியை கைது செய்ய முடியாதென சைதாப் பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விடுதலை செய்திருந்தது.
 
ஆனால் தமிழக பொலிஸார் திருமுருகன் காந்தியை நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து மீண்டும் பலாத்காரமாகக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

இதனைக் கண்டித்தும் இந்திய மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தியும் யாழ்ப்பாணத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்பவர்களுக்கு திருமுருகன் காந்தியின் சர்வதேசச் செயற்பாடுகள் பெரும் தலையிடி- நீதிமன்ற உத்தரவையும் மீறி கைது செய்யப்பட்டமைக்கு இதுவே காரணம்-- அரசியல் அவதானிகள்.

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜேர்மனி, சுவிசர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளரங்கக் கூட்டங்களில், தூத்துக்குடி காவல்துறைக் கலவரம் மற்றும் சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகள் தொடர்பாக திருமுருகன் காந்தி விளக்கவுரை நிகழ்த்தினார்.

அவ்வாறு விளக்கவுரை நிகழ்த்திய திருமுருகன் காந்தி மீண்டும் இந்தியவுக்கு வரும்போது, கைது செய்யும் நடவடிக்கையை ரகசியமாக இந்திய மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழக பொலிஸார் மேற்கொண்டிருந்தததாக மே 17 இயக்க உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்திய மற்றும் தமிழக அரசுகளின் அராஜகங்கள் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் விளக்கமளிக்கப்பட்டதால் அளிக்கப்பட்டதால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் மே 17 இயக்கம் கூறியுள்ளது.

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் பற்றியும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் திருமுருகன் காந்தி விளக்கமளித்து வருகின்றமை இந்திய மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கூறியிருந்தது.

இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்பவர்களுக்கு திருமுருகன் காந்தியின் சர்வதேசச் செயற்பாடுகள் பெரும் தலையிடி என்றும் கைது செய்யப்பட்டமைக்கு இதுவே காரணம் எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.