மலையக பொருந்தோட்ட

மக்களின் உரிமைகளை வலியுறுத்தி அக்கரப்பத்தனையில் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகம்- ஒருவர் உண்ணாவிரதம்

ஏமாற்ற வேண்டாம் எனவும் உருக்கமான வேண்டுகோள்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 11 15:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 11 16:11
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி 30ற்கும் அதிகமானோர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சனிக்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றது. அக்கரபத்தனை பெருந்தோட்ட பகுதியில் தனியார் கம்பனி ஒன்றின் கீழ் இயங்கும் வேவர்லி தோட்டத்தின் தொழிற்சங்க தோட்ட கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உரிமைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு ஆதரவாகவே இன்று இந்தச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. தோட்ட மைதானத்தில் இடம்பெற்ற போராட்டத்தி்ற்கு மக்கள் அதரவு வழங்கியிருந்தனர்.
 
தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் அமைத்துக் கொடுப்பட வேண்டும், லயன் குடியிருப்புக்கள் முற்றாக நீக்கப்பட வேண்டும், தொழிலாளர்களுடைய நாளாந்த சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குறுதிகளை மாத்திரம் வழங்காது உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் மக்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையும் விடுத்தனர்.

மலையகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் கீழ் உள்ள கிளங்கன் தோட்டத்திற்கு அருகில் இருக்கும் 30 ஏக்கர் நிலப்பரப்பை, வெளியாருக்கு பங்கீடு செய்து விற்பனை செய்யப்படும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு கடந்த திங்கட்கிழமை மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் அக்கர்ப்பத்தனையில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றுள்ளது. ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றார்.

வெள்ளை ஆடைகள் அணிந்து நிறை குடம் வைத்து விளக்கேற்றியவாறு இந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தை அறைகூவல் போராட்டமாக முன்னெடுப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

ஊழியர் சேமலாப நிதிகளை சூறையாடியவர்களை அடையாளப்படுத்த வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கத்தால் 1994ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சமூர்த்தி அபிவிருத்தி திட்டத்தின் நிதியுதவி்கள் தோட்ட மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் போாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

ஏமாற்றிவிட வேண்டும் என தோட்டத் தொழிற்சங்கங்களிடமும் மக்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.