மலையகத்தில் நிலவுரிமை

தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நான்காவது நாளாகவும் உண்ணாவிரதம்

சவப்பொட்டிகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டம்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 14 15:16
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 14 17:27
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாகவும் இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதியான முறையில் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகின்றது. இதற்கு ஆதரவாக அருகில் உள்ள ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், இன்று செவ்வாய்க்கிழமை தலவாக்கலை- டயகம பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இருவரையும் சவப்பெட்டிகளில் தாங்கியவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
 
ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பிரதேசத்தில் பெருமளவு இலங்கைப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீதிப் போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தினால் ஐந்துக்கும் அதிகமான தோட்டங்கள் பாதிகப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிலாளர்களும் மைதானத்தைச் சுற்றி அமர்ந்துள்ளனர். லயன்களில் குடியிருக்கும் தமது காணிகள் சொந்தமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அல்லது வேறு காணிகளை வழங்குமாறும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வந்து நேர்மையான வாக்குறுதிகள் வழங்கத் தவறினால், சகலரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்படப் போவதாகவும் தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, உண்ணாவிரதம் இருக்கும் இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு்ள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆனால், தமிழ் அரசியல் பிரதிநிதிகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையென போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவிக்கின்றனர்.