விசேட நீதிமன்றத்தின் மூலம்

ஊழல் மோசடிகள் பற்றிய 18 வழக்கு விசாரனைகள் நிறைவு- மஹிந்தவும் அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்களா?

ஆனால் போர்க்குற்ற விசாரனைகள் தவிர்ப்பு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 17 09:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 17 10:43
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து நடத்தப்பட்ட வழக்கு விசாரனைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்தார். மஹிந்த ராஜபகச தொடர்பான ஊழல் மோசடிகளை விசாரனை செய்வதற்கு உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தில் 18 வழக்குகள் விசாரிக்கப்பட்டு பூர்த்தியடைந்துள்ளன. ஆகவே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான காலம் நெருங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார். கொழும்பில் சென்ற புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் ராஜித சேனரட்ன, மஹிந்த மீதும் பல ஊழல் மோசடிகள், அதிகார துஸ்பிரயோங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
 
பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தினால் இந்த வழக்குகளை துரிதமாகவும் இரகசியமாகவும் விசாரனை செய்து முவுறுத்த முடிந்தது என்றும் மைத்திரி- ரணில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் ஒருபோதும் பின் நிற்காது எனவும் அமைச்சர் ராஜித சேனரட்ன கூறினார்.

சிங்கள மக்களைத் திருப்பதிப்படுத்தும் நோக்கிலும், தமது தேர்தல் வெற்றியை மாத்திரம் கருத்தில் கொண்டும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட நீதிமன்றத்தின் மூலமாக மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரனை நடத்தியுள்ளார்-- மஹிந்த ஆதரவு அமைச்சர்கள்.

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் உயர் பதவி வகித்த பலர் கைது செய்யப்படலாம் என்றும் மஹிந்த ராஜபக்ச, கோட்டபய ராஜபக்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இந்தப் 18 வழக்குகளும் ஊழல் மோசடிகளுடன் மாத்திரமே சம்பந்தப்பட்டது எனவும், ஆனால் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போரக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எந்தவொரு விடயங்கள் குறித்தும் விசாரனை இடம்பெறவில்லை என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

சிங்கள மக்களைத் திருப்பதிப்படுத்தும் நோக்கிலும், தமது தேர்தல் வெற்றியை மாத்திரம் கருத்தில் கொண்டும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட நீதிமன்றத்தின் மூலமாக மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரனை நடத்தியுள்ளதாக மஹிந்தவுக்கு ஆதரவான மூத்த அமைச்சர்கள் சிலர் விசனமடைந்துள்ளனர்.

அதேவேளை, விசேட நீதிமன்றத்தின் மூலம் நடத்தப்பட்ட விசாரனைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலருக்கும் உடன்பாடில்லை எனவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

இறுதி யுத்தத்தி்ல் காணாமல் போனவர்கள் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் வாழ்வதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.