இரு ரோந்து சேவைக் கப்பல்களை

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்புத் துறைமுகத்தில் கையளித்தார்- 11 மில்லியன்கள் பெறுமதியெனத் தெரிவிப்பு

கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ரணிலுடன் பேச்சு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 29 23:14
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 00:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவை கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன. ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) இன்று புதன்கிழமை அதனைக் கையளித்துள்ளார். கொழும்புத் துறைமுகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக் கடற்பிராந்திய ஆய்வு நடவடிக்கை, உயிர் காப்பாற்றும் செயற்பாடுகள், எரிபொருள் கசிவை முகாமை்ப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக இந்த இரு கப்பல்களும் பயனபடுத்தப்படவுள்ளன. மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு அமைச்சர் கஸுயுகி நகானே, இலங்கைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வருகை தந்தார்.
 
இன்று மாலை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளார். பதில் வெளிவிவகார அமைச்சா லக்ஸ்மன் கரியெல்லவையும் அவர் சந்தித்தார். இரு தரப்பு உறவுகள் குறித்து உரையாடியதாக இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

குறிப்பாக, மத்திய அதிவேக வீதியின் மூன்றாவது கட்டம், ஜப்பான் – இலங்கை இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு அறுபத்தியாறு வருடங்கள் பூர்த்தி, கொழும்பு துறைமுகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு இறங்குதுறையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி, கண்டி நகர் அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி, பசுமை பூங்காவொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) இலங்கைக்கு வருகை தந்து இருவாரங்களில் ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் இந்தப் பேச்சுக் குறித்து இலங்கைப் பிரதமர் அலுவலகம் எதுவும் தெரிவிக்கவில்லை

இலங்கை மீதான சி்னாவின் ஆதிக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் இருவர் இருவார இடைவெளியில் இலங்கைக்கு வருகை தந்தது இதுவே முத்ற் தடவை என்று கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

போருக்கு உதவியளித்த ஜப்பான், தற்போது இலங்கை முப்படைகளின் வளர்ச்சியிலும் தென்பகுதி பிரதேசங்கள் மற்றும் இலங்கையின் கடல்சார் அபிவிருத்திகளில் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.