இந்தியத் தலைநகர்

புதுடில்லிக்குப் பயணம் செய்ய முன்னர் சம்பந்தன் கொழும்பில் உள்ள சர்வதேசப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்

ஜப்பான் அமைச்சர்களின் வருகையின் பின்னரான உரையாடல்
பதிப்பு: 2018 செப். 09 13:57
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 09 15:07
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜப்பான் அமைச்சர்களின் வருகையின் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர். (Hanaa-singer) கொழும்பில் உள்ள கனேடிய தூதுவர் டேவிட் மைக்கினோன் (David McKinnon) ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருடன் நேற்றுச் சனிக்கிழமை சந்திப்பு இடம்பெற்றது. கனேடியத் தூதுவருடனான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து சம்பந்தன் விரிவாக விளக்கமளித்துள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
 
ஆனால், மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைத்துச் செயற்படுகின்ற விடயங்கள் குறித்து சம்பந்தனிடம் எடுத்துக் கூறியதாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறுதான் கொழும்பில் உள்ள கனேடியத் துாதரகமும் கூறியுள்ளது. ஆனால் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவுமே கூறவில்லையென கொழும்பில் உள்ள செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளன. பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் சென்ற சனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஆகியோர் கடந்த மாத இறுதியில் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், அமெரிக்க எண்ணைவள ஆய்வும் ஆரம்பமாகியுள்ளது.

இந்த விடயங்கள் குறித்தும் சம்பந்தன் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியோடு உரையாடியதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்றக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இநதியாவுக்குப் பயணம் செய்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரிய, சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், றிஸாட் பதியுதீன், மனோ கணேசன், கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன, ஜே.வி.பி உறுப்பினர் விஜித ஹேரத், மற்றும் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்த ஆகியோர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.