வவுனியா மாவட்டத்தில் மன்னார் மதவாச்சி பிரதான வீதியில்

கல்லாறுப் பாலத்திற்கு அருகாகவுள்ள தேக்கம் நீர்த்தேக்கப் பகுதியை புனரமைப்புச் செய்யுமாறு கோரிக்கை

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்தமைக்கான ஆதரங்களும் உண்டு
பதிப்பு: 2018 செப். 12 15:18
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 12 16:50
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வட மாகாணம் வவுனியா மாவட்டத்தில் மன்னார் மதவாச்சி பிரதான வீதிக்கு அன்மித்தாகக் காணப்படும் கல்லாறு பாலம் 1875ஆம் ஆண்டு பழமை வாய்ந்ததாகும். இங்கு காணப்படும் தேக்கம் என்ற பிரதான பகுதி கருங்கற்களினால் அமைக்கப்பட்ட பெரிய நீர்த்தேக்கமாகும். தேக்கம் என அழைக்கப்படும் இந்தப் பிரதான பகுதியில் உள்ள இந்நீர்த்தேக்கத்திற்கு நீராட, தற்போது பெருமளவு மக்கள் வந்து செல்கின்றனர். கல்லாறு பாலத்தைச் சூழவுள்ள இயற்கை அழகுள்ள இந்த பிரதேசத்தில் அதிகளவு வளங்களும் உள்ளன. விவசாயச் செய்கைக்கும் இதனை பயன்படுத்த முடியும். ஆகவே செட்டிகுளம் பிரதேச சபைக்கு வருமானம் தரக்கூடிய வகையில் பாலத்திற்கு அன்மித்த தேக்கம், நீர்த்தேக்கப் பகுதியை புனரமைக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ஜேசுதாஸ் டெல்சன் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
 
பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயம், மடு புனித தேவாலயம், மாந்தை திருக்கேதீஸ்ரம் ஆகியவற்றுக்குச் செல்லும் பக்தர்கள், இந்த நீரேந்துப் பகுதியைத் தரிசித்து பயன்படுத்தக் கூடிய முறையில் புனரமைக்குமாறும் அவர் தனது பிரேரணையில் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட மக்களை வரவேற்கும் பகுதியாகவும் இது காணப்படுன்றது.

ஆகவே வரலாற்றுப் பார்வையில் பாரம்பரிய தமிழ் மொழி இறுவட்டுக்களை அமைத்து இதனூடாக தமிழர் தாயகப் பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும்.

புனித ஜோசவாஸ் அடிகளார் இலங்கைக்கு வந்தபோது இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற உள் வீதியில் சிலுவை ஒன்றை வைத்ததாகவும் வரலாறுகள் உண்டு.

இந்த நீர்த்தேக்கப் பகுதியில் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான வரலாறுத் தொல்லியல் சான்றுகள் உள்ளதாக நாடக ஆசிரியர் அருணாச்சலம் செல்லத்துரை தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

1875ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தக் கல்லாறு பாலம் மற்றும் அதனைச் சூழவுள்ள நீர்த்தேக்கம், மன்னார் குஞ்சிக்குளத்திற்கு ஒரு பகுதியாகவும் மன்னார் கட்டுக்கரைக்கு மற்றொரு பகுதியாகவும் செல்கின்றது.

ஆகவே வன்னிப் பெருநிலப்பரப்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த நீர்த்தேக்கப் பகுதி புனரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்பதை செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பிரேரணை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக உறுப்பினர் டெல்ஸன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

மகாவலி நீரை வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களை கூறுபோட பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம், தமிழர் பிரதேசங்களில் உள்ள இவ்வாறான நீர்த்தேக்கங்களை புனரமைப்புச் செய்து வருமானம் ஈட்டக் கூடிய முறையிலும் விவசாயச் செய்கைக்கு ஏற்றவாறும் புனரமைப்புச் செய்வதில்லையென பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.