வடமாகாணம்

பூநகரி கரியாலை நாகபடுவான் கணேஸ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து இலங்கை இராணுவச் சிப்பாய்கள் இருவர் அட்டகாசம்

மக்கள் மடக்கிப் பிடித்தனர்- முகாமை அகற்றுமாறும் கோரிக்கை
பதிப்பு: 2018 செப். 13 10:52
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 13 11:39
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் கிளிநொச்சி பூநகரி கரியாலை நாகபடுவான் கணேஸ் மக்கள் குடியிருப்புக்குள் வந்து குற்றச் செயலில் ஈடுபட முற்பட்ட இலங்கை இராணுச் சிப்பாய்கள் இருவரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை இராணுவச் சிப்பாய்கள் ஏற்கனவே இந்தக் குடியிருப்புக்குள் புகுந்து பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் பல தடவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை. இலங்கை இராணுவச் சிப்பாய்கள் வீடுகளுக்குள் புகுந்து மேற்கொண்டு வரும் தொந்தரவுகள் குறித்து ஆதாரத்துடன் முறையிட வேண்டும் என அதிகாரிகள் கூறியிருந்தனர். இலங்கைப் பொலிஸாரும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
 
இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த இரண்டு இலங்கை இராணுவச் சிப்பாய்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

வீட்டுக்குள் நுழைந்த இலங்கை இராணுவச் சிப்பாய்களைக் கண்டு, வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதனால் அயலவர்கள் குறித்த வீட்டுப் பக்கம் ஓடிச் சென்றபோது, அங்கிருந்த இராணுவச் சிப்பாய்கள் இருவரை மடக்கிப் பிடித்தனர்.

அவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்கள் இருவரையும் பொதுமக்கள் முழங்காவிலில் உள்ள இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனாலும், இலங்கைப் பொலிஸார் சரியான நடவடிக்கை எடுப்பார்களா இல்லையா என்பது குறித்து மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.

மக்கள் குடியிருப்புப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமையே இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம் என்றும் முகாமை அகற்ற வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.