இலங்கையின்

சிறைச்சாலைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்- பொது அமைப்புகள் கண்டனம்

பொது மன்னிப்புக்கான பாிசீலனைகூட இல்லை என்கிறார் சக்திவேல்
பதிப்பு: 2018 செப். 18 10:14
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 18 21:09
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் அனுராதபுரம் உள்ளிட்ட தென்பகுதி மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கொழும்பில் உள்ள மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அது குறித்து பரிசீலிக்க விரும்பவில்லை என அருட்தந்தை சத்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கொழும்பில் உள்ள சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் எட்டு தமிழ் அரசியல் கைகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாக விசாரணையோ விடுதலையோ இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

தற்போதும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் எட்டுப்பேரில் ஒருவர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிவசுப்பிரமணியம் தில்லைராஜா என்ற கைதியே, நேற்று முன்தினம் மாலை, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தக் கைதி நீரழிவு நோய்க்கு உள்ளாகியதாகவும் சிகிச்சைக்காகவே அங்கு இடமாற்றம் செய்யப்படடதாகவும் இலங்கைச் சிறைச்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

எட்டு வருடங்களாக இந்தக் கைதி அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இலங்கையின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் சுமார் 220 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இரகசிய முகாம்களிலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கூறியுள்ளது.