மன்னாார் மாவட்டத்தில்

தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி, ஓலைத்தொடுவாய் பிரதேசங்களில் காணிகள் சுவீகரிப்பு

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு
பதிப்பு: 2018 செப். 18 22:26
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 19 09:56
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி மற்றும் ஓலைத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை அரசாங்கம் சுவீகரித்து வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். மன்னார் மாவட்டத்தில் பாரிய காற்றாலை ஒன்றினை நிறுவுவதற்காகவே இந்தக் காணி சுவிகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காற்று மின்னாலை நிர்மாண வேலைகளுக்காக இதுவரை மன்னார் மாவட்ட மக்களிடமிருந்து 300 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் அனைத்தும் தாழ்வுபாடு தொடக்கம் ஓலைத்தொடுவாய் வரை கடற்கரைய அண்டியுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளாகும்.
 
பொதுமக்களிற்கு சொந்தமான பெறுமதியான தோட்டக்காணிகள் மற்றும் தென்னந் தோட்டங்கள் ஆகியனவும் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் அடங்குகின்றன.

அண்மைக்காலங்களில் இலங்கை முழுவதும் நிலவிய வரட்சியினால் நாடளாவிய ரீதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக இலங்கை தேசிய மின் உற்பத்தியில் பாரிய ஸ்தம்பித நிலை உருவாகியது.

இந்நிலையில் இலங்கையில் பல முக்கிய நகரங்களில் தொடர் மின் வெட்டுகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியது. இதனால் அரச தனியார் தொழில் முயற்சிகளில் பாரிய முடக்கநிலை ஏற்பட்டிருந்தன.

இதனால் தொழிற்துறைகளில் பல மில்லியன் ரூபா பெறுமதியான நட்டம் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையிலேயே இலங்கை அரசாங்கம் எதிர்கால வரட்சி நிலை மற்றும் அதனை தொடர்ந்து இலங்கை எதிர்நோக்கிவரும் மின் தடை ஆகியவற்றில் இருந்து மீள்வதற்கு குறித்த காற்றாலைகள் தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் கொழும்பை மையப்படுத்திய தனியார் நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.