மட்டக்களப்பு

மாங்கேணியில் கடல்சார் வளங்கள் பாதுகாப்புத் தினம் அனுஷ்டிக்கப்பட்டது- மாணவர்களும் பங்கேற்பு

உக்கும் பொருட்கள், உக்காத பொருட்கள் அடையாளமிடப்பட்டன
பதிப்பு: 2018 செப். 20 09:18
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 20 10:51
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்புத் தினம் மாங்கேணியில் அனுஸ்ட்டிக்கட்டது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாவட்ட கரையோர பாதுகாப்புப்பிரிவின் நெறிப்படுத்தலில் மாங்கேணி கரையோரப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்புத் தினம் நேற்று புதன்கிழமை மாங்கேணியில் அனுஸ்ட்டிக்கட்டது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாவட்ட கரையோர பாதுகாப்புப்பிரிவின் நெறிப்படுத்தலின் மாங்கேணி கரையோரப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது.
 
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செலாளர் பிரிவிலுள்ள மாங்கேணி கிராமத்தின் இரு நூறு மீற்றர் கரையோரப் பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தாம் நடைபெறும் இச்சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தில் மாங்கேணி கிராமத்தின் கரையோரத்திலுள்ள உக்கும் பொருட்கள் மற்றும் உக்காத பொருட்கள் என அடையாளப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

இந்தப் பணியின் மூலமாக கரையோரம் அழகுபடுத்தப்பட்டதுடன், கடலிருந்து கரையோரமாக ஒதுங்கும் கழிப்பொருட்களினால் கரையோரம் அசுத்தமடைவதும் தடுக்கப்பட்டுள்ளதாக கமநல அமைப்பின் தலைவர் சி.உதயன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இதில் கரையோர சுற்றுசூழல் பிரிவு, கரையோர பாதுகாப்பு பிரிவு, சமுர்த்தி உத்தியோகஸ்தர், உதவிதிட்டமிடல் அபிவித்த உதியோகஸதர் பாடசாலை மணவர்கள் அதிபர் ஆசிரியர், விவசாய அமைப்பு, மாதர் அவிருத்தி சங்கம் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.