போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மைத்திரி - ரணில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

உறவினர்கள் குற்றச்சாட்டு - கொழும்பை மையப்படுத்திய அலுவலகத்திலும் நம்பிக்கையில்லை
பதிப்பு: 2018 ஒக். 16 05:15
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 16 14:26
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மைத்திரி - ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இழப்பீடுகளும், நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாக இருந்தபேபாதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் காணாமல் போன உறவினர் ஒருவரின் சகோதரி ச.சங்கீத்தா தெரிவித்துள்ளார்.
 
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் குறிக்கோள் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி அறிதல், அவர்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளுதல், பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களதும் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய உத்தரவாதங்களை வழங்குதல், நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை அறிமுகம் செய்தல் என்பனவாகும்.

ஆனால் இவற்றில் எதுவுமே நடைபெறவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை, நாளாந்தம் பல சவால்களையும் பிரச்சினைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பங்கள் எதிர்நோக்கிவருகின்றனர்.

இந்த நிலையில் மைத்திரி - ரணில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் உரிய முறையில் செயற்பட வேண்டும் என்றும் இழப்பீடுகளை விட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வடக்கு - கிழக்கு தாயகப் பிரதேசங்களில் உள்ள உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்மை மையப்படுத்தி செயற்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்திலும் நம்பிக்கை இல்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனர்.