மலையகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்கள்

பதுளையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்

10 இலட்சம் பேரின் கையொப்பங்களுடன் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தகவல்
பதிப்பு: 2018 ஒக். 18 22:30
புலம்: மலையகம்
புதுப்பிப்பு: ஒக். 19 07:58
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது வேதனத்தை அதிகரித்துத் தருமாறு வலியுறுத்தி பல வழிகளிலும் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையுடன் கூடியதாக நூலகம், ஆய்வுகூடம் மற்றும் கட்டடங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தி இன்றைய தினம் பதுளை நகரில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இலவசக் கல்விக்கான மாணவர் ஒன்றியத்தினால் பதுளை பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக கையெழுத்திடும் கோரிக்கைகள் அடங்கிய பதாகை தொங்கவிடப்பட்டு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

10 இலட்சம் பேரின் கையொப்பங்களுடன் குறித்த கையெழுத்து மகஜரை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கையளித்து அழுத்தம் கொடுக்கவுள்ளதாக, இலவசக் கல்விக்கான மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.