இனப் படுகொலை முள்ளிவாய்க்கால் நிகழ்வு

உலகத்தின் மனட்சாட்சியை உலுக்கிய அழுகுரல்

இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்த மக்கள்
பதிப்பு: 2018 மே 18 17:38
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 15 13:49
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு 11 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.30 வரை இடம்பெற்றதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது என்றும் செய்தியாளர் குறிப்பிடடார்.
 
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நிகழ்வில், இறுதிப் போரில் பெற்றோரையும் உறவினர்களையும் இழந்து காயமடைந்த இளம் பெண் ஒருவர், நினைவுச் சுடரை ஏற்றிவைத்தார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் அருகில் நின்றார்.

Mullivaikkal Mullivaikkal Mullivaikkal Mullivaikkal
முள்ளிவாய்க்காலில் தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செய்யும் அன்னையர்
இந் நிழக்வில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு போரில் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமது உறவினர்களை நினைவு கூர்ந்து அழுது புலம்பியதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.

இது சிங்கள அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்ட்ட இன அழிப்பு என்றும் இதற்கு நீதி கடைக்காதா என்றும் வயோதிபர் ஒருவர் வாய்விட்டு அழுததாக செய்தியாளர் தெரிவித்தார்.

போரை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு உதவி செய்த இந்தியா உள்ளிட்ட சர்வேதச நாடுகள் பொறுப்புக் கூறாமல் மௌனமாக இருப்பதாகவும் உறவினர்கள் அழுது புலம்பியதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தனர்.

நிகழ்வு உரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும், அமைதியாகவும் அதேவேளை சர்வதேசத்தின் மனட்சாட்சியை உறுத்தும் வகையில் அமைந்ததாகவும் நிகழ்வில் கலந்துகொண்ட கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் எஸ்.மணிவண்ணன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிமர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்த ராஜா, அனந்தி சசிதரன், தர்மலிங்கம் சித்தாத்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மதகுருமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்;வில் முதமைச்சர் விக்னேஸ்வரன் மாத்திரமே உரையாற்றினார். இனப் படுகொலை என்றும் சாட்சியங்கள் இன்றி நடத்;தி முடிக்கப்பட்ட இனப் படுகொலை எனவும் தனது உரையில் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விக்னே;வரன், சர்வதேசம் உரிய பதில் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

ஆறு அம்ச கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார் என கூர்மை செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பொது அமைப்புகள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ;டித்தாகவும் கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், தமிழின உணர்வாளர் டாக்டர் தமிழ்நேசன், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் எஸ்.நிலாந்தன் உட்பட பெருமளமான பொதுமக்கள்,மதகுருமார்கள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவசிறி ஜெகதீஸ்வர குருக்கள், அருட்தந்தை நிக்ஸன் அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வடகிழக்கில் உயிரிழந்த உறவுகளுக்காக இரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது அதனைத்தொடர்ந்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏனைய நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு அந்த நாடுகள் நீதியை வழங்கியுள்ள நிலையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழின இனப்படுகொலைக்கு இதுவரையில் எந்தவித விசாரணையோ அல்லது கவலையோ தெரிவிக்கப்படவில்லையெனவும இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.