தமிழர் தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் சிவில் செயற்பாடுகள்

மனிதாபிமான பணிகளைக் கூட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால தடுக்கின்றார்- முதலமைச்சர் விக்னேஸ்வரன்

மாகாணங்களின் அதிகாரங்களில் கூட தலையீடு என்கின்றார் சர்வேஸ்வரன்
பதிப்பு: 2018 ஜூன் 15 11:19
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 15 17:51
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகப் பகுதிகளில் வாழ்வார உதவிகளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க மறுப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என வடமாகாண சபை முதமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக அமைச்சர் சுவாமிநாதனால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் நியாயமானது. ஆனால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நிராகரித்துள்ளார். இது மனிதாபிமானம் அற்ற செயல் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணனை சந்தித்து பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். அதவேளை, கொழும்பு அரசாங்கம் மாகாண சபைகளின் அதிகாரங்களில் தலையிடுவதாக வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணனை நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்து உரையாடியபோது முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

இலங்கை இராணுவம், தமிழர் தாயக பிரதேசங்களில் சிவில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை பற்றியும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகள் உட்பட போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாத உதவிகைள இலங்கை ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன ஏன் மறுக்கின்றார். வாழ்வாதார உதவிகளை மக்கள் பிரதிநிதிகள்தான் செய்ய வேண்டும். இராணுவம் அல்ல என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

அதேவேளை, மாகாண சபைகளின் அதிகாரங்கள் இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் உள்ளன. இதனால் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய மனிதாபிமான பணிகளைக் கூட ஒற்றையாட்சி அதிகாரத்தின் கீழ், மைத்திரி ரணில் அரசாங்கம், இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு செய்து வருவதாக வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வவேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழர் தாயக பிரதேசங்களில் இராணுவம் சிவில் நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும் புனர்நிர்மான பணிகளில் கூட இராணுவம் தலையிடுவதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழர் தாயக பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக வடமகாண சபைினால் அமைக்கப்பட்ட செயலணிக் கூட்டத்திலும், இராணுவம் சிவில் செயற்பாடுகளில் தலையிடுகின்றமை குறித்து பிரஸ்த்தாபிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் போராளிகள் மற்றும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார மனிதாபிமான பணிகளை செய்வதற்காக அமைச்சர் சுவாமிநாதன், கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

ஆனால், அவ்வாறு மனிதாபிமான பணிகளை செய்தால். விடுதலைப் புலிகளை மீளவும் உயிர்ப்பிப்பதாக அமைந்துவிடும் என்று கூறி. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.