முற்றுப் பெறாத ராஜீவ் கொலை விவகாரம்

பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய இந்திய மத்திய அரசு விரும்பவில்லை

தமிழக அரசின் மனுவை ஏற்க மறுத்தார் இந்திய ஜனாதிபதி
பதிப்பு: 2018 ஜூன் 17 04:01
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஜூன் 17 15:59
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்தியாவி்ன் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு கடந்த 27 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி தமிழக மாநில அரசு அனுப்பிய மனுவை இந்திய ஒன்றிய அரசின் ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் முடிவின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இம்முடிவை எடுத்தாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளில், 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளோரை கருணை அடிப்படையில் விடுவித்து வருகின்றது.

தமிழக அரசாங்கம் ஏழுபோ் விடுதலை தொடர்பாக தொடர்ந்து தனது முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனால் இந்திய மத்திய அரசு தொடர்ந்து நிராகரிக்கின்றது.

இந்த ஆண்டும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நினைவு கூரலைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுவித்து வரும் கைதிகளை விடுவிக்க முயன்றது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரை விடுவிக்கும் முடிவு தொடர்பான மனுவை இந்திய மத்திய அரசாங்கத்தின் உள் துறை அமைச்சரகத்திற்கு அனுப்பியதும், ஏழுபேரின் விடுதலை தொடர்பான நம்பிக்கை துளிர்க்கத் தொடங்கியது.

ஆனால், மத்திய அரசாங்கத்தின் முடிவின்படி இந்திய ஜனாதிபதி, தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளார்.

1991 ஆம் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தமிழகத்தின் சிறிபெரும்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பில், இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுண்டதைத் தொடர்ந்து, 27 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் பின்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் 1999ஆம் ஆண்டில், 19 பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டு, ஏழு பேருக்கு மாத்திரமே தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

அதன்பின்னர், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத் தண்டனையும், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையாக தீர்ப்பு மாறியது.

2011ஆம் ஆண்டு மூவருக்கான தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு, ஏழுபேர் விடுதலை தொடர்பான வழக்கு பல்வேறு நிலைகளில் தொடர்ந்து நடத்தப்பட்டும் வருகிறது.

1991லிருந்து விசாரணையில் ஈடுபட்டு வந்த காவல் அதிகாரி தியாகராசன், “பேரறிவாளன் தான் வாங்கிக்கொடுத்த மின்கலன் (Battery) எதற்கானது என்பதை தான் அறிந்திருக்கவில்லை” என சொன்ன முக்கியப் பகுதியை தான் பதிவு செய்யவில்லை என்றும், ஒருவேளை பதிவு செய்திருந்தால், பேரறிவாளனுக்கு விடுதலை என்றோ கிடைத்திருக்கும் என்று 2013இல் கூறியிருந்தார்.

இதனையடுத்து, 2018 ஜனவரி மாத விசாரணையின்போது, பேரறிவாளன் இக்கருத்தை முன்னிறுத்தி, தனக்கான விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என கோரியிருந்தார். உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, சிபஐ விளக்கம் கேட்டது. சி.பி.ஐ யிடம் இதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்றம் கோரியபோதும், மத்திய அரசாங்கத்தின் சார்பில், இம்மனு மீதான கடும் எதிர்ப்போக்கே கடைப்பிடிக்கப் பட்டது.

2017 இறுதிக் காலக்கட்டத்தில் பேரறிவாளனும் ரவிச்சந்திரனும் 26 ஆண்டுகளுக்கு பிறகு, கடும் விதிமுறைகளுடன், 60 நாட்கள் அவரவர் வீட்டிற்கு பிணையில் விடுக்கப்பட்டிருந்தனர். ஏனையோருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், இன்றைய ஆளும் தமிழக அரசாங்கம் ஏழுபோ் விடுதலை தொடர்பாக தொடர்ந்து தனது முயற்சிகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.