நிரல்
ஓகஸ்ட் 10 14:33

இராணுவ உறவின் முக்கியத்துவம்- செயலணிக்குழுக்களை அமைத்துச் செயற்பட அமைச்சரவை அங்கீகாரம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கைக்கும் ரஷியாவுக்கும் இடையிலான இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான கூட்டுச் செயலணிக் குழுக்களை அமைப்பதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முப்படைகளின் தளபதி மற்றும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அங்கீhரத்தைப் பெறும் யோசனை ஒன்றை, சென்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். இரு நாடுகளுக்கிடையேயும் உருவாக்கப்படவுள்ள இந்தக் கூட்டுச் செயலணிக் குழுக்களின் செயற்பாடுகள், நிபந்தனைகள் குறித்து ஆவணம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான அனுமதியை இலங்கை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 09 20:10

நிலத்தடி நீரை அகத்துறிஞ்சும் தொழிற்சாலையை உடனடியாக மூடுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம

(மட்டக்களப்பு, ஈழம்) கொழும்பு அரசாங்கத்தின் தொடர்புடை அரசியல் கட்சிகள் சிலவற்றின் முக்கிய பிரமுகர்களின் செல்வாக்குடன், புல்லூமலை கிராமத்தில், நிலத்தடி நீரை அகத்துறிஞ்சும் தொழிற்சாலை ஒன்று அமைப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி கிராம மக்கள் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரிய புல்லூமலை கிராமத்தில் இன்று வியாழக்கிழமை காலை 10.30க்கு தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஐந்தாவது தடவையாக இந்தப் போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
ஓகஸ்ட் 09 01:34

கருணாநிதியின் உடல் மேல் இந்தியத் தேசியக் கொடி- திமுக கொடி கீழே, வரலாற்றை மாற்றியது யார்?

(சென்னை, தமிழ்நாடு) திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரும், தமிழ்நாட்டிற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவருமான `கலைஞர்` என்றழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதி தனது 94ஆம் வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவி வகித்து இறந்தபோது (1969), அவரது உடலின் மேல் போர்த்தப்பட்டிருந்த இந்தியத் தேசியக் கொடியை அகற்றி, அவருக்கு கட்சிக் கொடியை கருணாநிதி போர்த்தியிருந்தார். ஆனால், இன்று கருணாநிதியின் உடல் மீது இருந்த திமுக கொடியின் மேல் இந்தியத் தேசியக் கொடி போர்த்தப்பட்டமை வரலாற்று முரண் என தமிழக ஊடகவியலாளர் ஒருவர் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்திருந்தார்.
ஓகஸ்ட் 08 23:15

வேலை நிறுத்தத்தினால் கொழும்பு கோட்டையில் பதற்றம்- இலங்கை அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் ரயில் நிலையம்

(வவுனியா, ஈழம் ) சம்பள உயர்வுகோரி இலங்கை ரயில் இயந்திர சாரதிகள், ரயில் காப்பாளர்கள் மறு அறிவித்தல் வரை இன்று புதன்கிழமை பிற்பகல் மூன்று மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்து்ள்ளனர். இதனால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் இன்று மாலை முதல் இலங்கை விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால் நாளை வியாழக்கிழமை அதிகாலை முதல் கொழும்பில் இருந்து அனைத்துப் பகுதிகளுக்குமான விசேட பேரூந்து சேவைகளில் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்படும் என மைத்திரி- ரணில் அரசாங்கம் இன்றிரவு அறிவித்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பித்தவுடன் மேலதிக பேரூந்து சேவைகளை நடத்துமாறு அரசாங்கம் உடனடியாகவே உத்தரவிட்டிருந்தது.
ஓகஸ்ட் 08 19:22

வாகரை பிரதேசத்தில் மீனவர் நலன்கருதி அமைக்கப்படும் கட்டடத்தில் மோசடி- பிரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) இருபது இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மீனவர்கள் பயன்படுத்தும் கட்டடம் ஒன்றை கட்டுவதற்கு ஒப்பந்தக்காரர்களினால் தரம்குறைந்த மணல் பயன்படுத்தப்படுவதாக வாகரை பிரதேச சபையின் உறுப்பினர் சிறில் அண்டன் தெரிவித்தார். கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவி்ல் உள்ள காயாங்கேணி பகுதியில், மீன்பிடி அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவி மூலம் அமைக்கப்படும் கட்டடமானது வட்டவான், காயாங்கேணி, இறாஓடை, ஆலங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 120 மீன்பிடியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இக்கட்டடம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் சிறில் அண்டன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 08 14:29

கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பலரும் இரங்கல்- இலங்கை அமைச்சர் குழு சென்னைக்குப் பயணம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ் நாட்டில் ஐந்து தடவைகள் முதலமைச்சராக பதவி வகித்தவருமான கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள், மற்றும் பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி 10 நிமிடமளவில் தனது 94 ஆவது வயதில் கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் கருணாநிதி காலமானதாக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து இந்திய இலங்கை அரசியல் பிரதிநிதிகள் தமது ஆழந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ஓகஸ்ட் 07 23:08

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் சட்டமூலம் இலங்கை அரசியல் யாப்புக்கு முரண்- உயர் நீதிமன்றம்

(வவுனியா, ஈழம் ) தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் வழங்குவதற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்குரிய நகல்ச் சட்ட மூலத்தின் சில விதிமுறைகள் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு முரணாகவுள்ளது என்று, இலங்கை அரசின் உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்த நகல்ச் சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால், இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும். அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சபாநாயகர் கூறினார். இலங்கை நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் ஆரம்பமானதும் சபாநாயகர் இந்த அறிவிப்பைச் செய்தார்.
ஓகஸ்ட் 07 20:49

தமிழ் இளைஞர் யுவதிகள் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபட வேண்டும்-பிரதேச சபைத் தவிசாளர்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் வலிந்து ஊடுருவும் போதைப் போதைப்பொருள் பாவனையில் இருந்து தமிழ் இளைஞர் யுவதிகள் விடுபட வேண்டும். அதற்குரிய முறையில் விழித்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையின் தவிசாளர் சிவஞானம் கோணலிங்கம் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான சிந்தனைகளில் இருந்து திசை திருப்பும் நோக்க்கில், சில சக்திகள் போதைப் பொருள்பாவனையை ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். திட்டமுகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சும், தேசிய இளைஞர் சேவை திணைக்களகம், வாகரை பிரதேச இளைஞர் சம்மேளனமும் இணைந்து நடாத்திய இளைஞர் தலைமைத்துவ பயிற்சி நிறைவு நாளன்று, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
ஓகஸ்ட் 07 16:41

யாழ். வட்டுக்கோட்டையில் இரவுவேளையில் மர்ம மனிதர்களின் நடமாட்டம்- அச்சத்துடன் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணவி, செட்டியார்மட பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு இந்த மர்ம மனிதர்களின் நடமாமட்டம் இருந்ததாகவும் இளைஞர்கள பதற்றத்துடன் வீதிகளில் நின்று காவல் புரிந்தாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் அராலியில் மிகவும் உயரம் குறைவான குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், வட்டுக்கோட்டையில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருந்தாகவும் மக்கள் கூறுகின்றனர். இந்த மர்ம மனிதர்கள் வீடுகளுக்கு கற்களை வீசியுள்ளனர். மக்களை அச்சுறுத்தும் வகையிலான சத்தங்களையும் எழுப்பியுள்ளனர்.
ஓகஸ்ட் 07 14:54

கலந்துரையாடல்களை புறக்கணிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் கூறுகின்றனர் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்ட கடலில் தென்பகுதியில் இருந்து வரும் மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். சிங்கள மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதால், தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாக பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எதிர்ப்பு வெளியிட்டு, சென்ற இரண்டாம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முல்லைத்தீவில் நடத்தியிருந்தனர். தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடும் முல்லைத்தீவு மீனவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.