இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் இதனால் ரணில் - மைத்திரி அரசாங்கம் வடக்கு - கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து கொழும்பில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு காணிகளை விற்பனை செய்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.
இல்மனைற் அகழ்வுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதமும் வாகரை மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அகழ்வைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உறுதியளித்திருந்தனர்.
ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள பல்தேசியக் கம்பனிகளுக்கு காணிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.