இவ்வாறான வதந்திகள் தொடர்பாக மாகாநாயக்கத் தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கண்டியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
விளக்கமளித்து மகாசங்கத்தினருக்கு எழுதப்பட்ட கடிதத்தை இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சென்று கையளித்து மேலும் விளக்கமளித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராகப் பொய்யான பிரச்சாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகவும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதின்மூன்று அம்சக் கோரிக்கை அடங்கிய ஆவணத்தை சஜித் பிரேமதாச பெற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கோரிக்கைகளை ஏற்கவும் முடியாதென்று பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) 480 மில்லியன் டொலர் நிதியை வழங்க முன் வந்துள்ளது.
ஆனால் அது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என்றும் கூறிய அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வந்த பின்னர் சர்வதேச உடன்படிக்கைகள் எதிலும் கைச்சாத்திடப்படமாட்டததென்றும் கூறினார்.