சந்திரிக்காவின் ஆட்சியில் நடந்த படுகொலைகள்

நவாலி ஆலயங்கள் மீதான தாக்குதல் நினைவுகள்- இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்திய மக்கள்

மன உறுதியும் கொள்கையும் என்றும் நிலைத்திருக்கும் என்கிறார் அருட்தந்தை ரவிச்சந்திரன்
பதிப்பு: 2018 ஜூலை 10 14:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 11 13:46
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது 1995ஆம் ஆண்டு, யூலை ஒன்பதாம் திகதி, தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்ட நினைவு வணக்க நிகழ்வு, அருட்தந்தை ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இன அழிப்பு நோக்கில் தொடர்ச்சியாக 13 குண்டுகள் வீச்ப்பட்டிருந்தன. இந்தத் தாக்குதலில் 150 பேர் வரை காயமடைந்தனர். இன்றுவரை இலங்கை அரசாங்கத்தின் எந்தவிதமான உதவிகளும் இன்றி சிரமங்களுடன் காயமடைந்தவர்கள் வாழ்ந்து வருவகின்றனர். பலர் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று விட்டனர்.
 
சில்லாலை பிரிவு மூத்த கிராம அலுவலர் பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை, இளநிலை கிராம அலுவலர் செல்வி ஹேமலதா செல்வராஜா உட்பட அதிகாரிகள் பலர், இந்த ஆலயங்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கி கொண்டிருந்தபோது குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், மற்றும் முருக மூர்த்தி ஆலயத்தின் மீது 09-07-1995 அன்று மேற்கொள்ளப்பட்ட விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை உறவினர்கள் நேற்று நினைவு கூர்ந்தனர்.

அழுதுபுலம்பிய மக்கள் தமது கொல்லப்பட்ட உறவுகளை நினைத்து வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். இனப்படுகொலைக்கான சா்வதேச விசாரணை தேவை என்று வழிபாட்டில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர்.

போாில் பாதிக்கப்பட்ட மக்களின் மன உறுதியும் கொள்கையும் என்றென்றும் நிலைத்திருக்கும் என அருட்தந்தை ரவிச்சந்திரன் வழிபாட்டின்போது கூறியிருந்தார்.

இலங்கை இராணுவத்தின் அகோரத் தாக்குதல்களினால் வீடுகளில் இருக்க அச்சமடைந்த நவாலி பிரதேச மக்கள், இந்த இரு ஆலயங்களிலும் தஞ்சமடைந்திருந்தபோது தாக்குதல் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தினரால் முன்னோக்கிப் பாய்தல் எனப் பெயரிடப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை, வலிகாமம் பிரதேசத்தில் அன்று ஆரம்பித்தபோது. யாழ் குடாநாட்டில் இருந்து இலட்சக்க்ணக்கான மக்கள் இடம்பெயர ஆரம்பித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தற்போது மைத்திரி ரணில் அரசாங்கத்தில் இன நல்லிணக்கத்துக்கான செயலணியின் நிழல் அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். அந்தச் செயலணியின் பிரதான ஆலோசகராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் செயற்படுகின்றார்.

அதேவேளை, இனப்படுககொலை விசாரணை என்பதை 1958ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்தார்.