வன்னி பெருநிலப் பகுதியான முல்லைத்தீவில் இறுதி போரில்; இலஙிகை இராணுவத்தின் கடுமையான தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களால் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் மண்ணை எடுத்து ஆரம்பித்த ஊர்திப் பவனி வவுனியா சென்று அங்கிருந்து மன்னார வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்திற்கும் சென்றிருந்தது.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து மீண்டும் ஆரம்பமானது. ஊர்தி பவனி கொடிகாமம் பளை பரந்தன் தர்மபுரம் விசுவமடு ஊடாக வள்ளிபுனம் பகுதியை சென்றடைந்து, பின்னர் இன்று வியாழக்கிழமை காலை வள்ளிபுனம் செஞ்சோலை வளாக சந்தியில் இருந்து ஆரம்பமாகிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு சந்தி சென்று அங்கு இருந்து மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் அடங்கிய மாபெரும் வாகன பேரணியாக முள்ளிவாய்க்கால் சென்றடைந்தது.
அங்கு இடம்பெற்ற இறுதி வணக்க நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் பங்குபற்றினர். போரில் உயிர்நீத்த உறவினர்கள், போராளிகளுக்கு வணக்கம் செலுத்தினர். ஈழத்தமிழர்களின் சுயநிரிணய உரிமைரயை வலியுறுத்தும் பிரகணடமும் வாசிக்கப்பட்டது.