தமிழர் தாயகமான

முல்லைத்தீவில் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பலாத்காரமாகக் குடியேறிய சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள்

கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாடு- மக்கள் கூறுகின்றனர்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 23 00:10
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 23 00:55
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக தென்பகுதி சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு- நாயாறு பிரதேசத்திற்குத் தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்களிற்கே காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் நிலங்களில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என முல்லைத்தீவில் உள்ள இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அந்த உத்ரதரவையும் மீறிக் கொழும்பின் செல்வாக்குடன் சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
அத்துடன் சிங்களக் குடியேறுவதற்குத் தேவையான உதவிகளையும் செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

போர் காரணமாக இந்தப் பிரதேசங்களில் வாழந்த மக்கள், 1983 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்தப் பிரதேசங்களில் 2009 ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான சூழலில், இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் குடியேறியுள்ள சிங்கள மக்கள் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குமாறு மைத்திரி- ரணில் அரசாங்கத்திடம் கேரியுள்ளனர்.

எனினும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியாது என்றும் அந்தப் பிரதேசங்களில் உள்ள காணிகள் தமிழ் மக்களுக்குச் சொந்தமானவை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஆனால், கொழும்பு அரசியல் செல்வாக்கு மற்றும் முல்லைத்தீவில் உள்ள இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் சிங்கள மக்கள் அங்கு தொடர்ந்து குடியிருப்பதாகவும், இலங்கை மாகாவலி அபிவிருத்தி அதிகார சபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத முல்லைத்தீவுச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தொடர்பாக முல்லைத்தீவு செயலகத்தில் உள்ள காணிப்பதிவு அதிகாரிக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லை.

அதேவேளை, முல்லைத்தீவு செயலகத்தில் உள்ள காணிப்பதிவு அதிகாரிக்கு அறிவிக்காமல் எவ்வாறு இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, முல்லைத்தீவில் உள்ள காணிகளுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்க முடியும் என பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.