கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

வாகரை பிரதேசத்தில் மீனவர் நலன்கருதி அமைக்கப்படும் கட்டடத்தில் மோசடி- பிரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

கட்டட ஒப்பந்தங்களிலும் குழறுபடி
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 08 19:22
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 08 21:27
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இருபது இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மீனவர்கள் பயன்படுத்தும் கட்டடம் ஒன்றை கட்டுவதற்கு ஒப்பந்தக்காரர்களினால் தரம்குறைந்த மணல் பயன்படுத்தப்படுவதாக வாகரை பிரதேச சபையின் உறுப்பினர் சிறில் அண்டன் தெரிவித்தார். கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவி்ல் உள்ள காயாங்கேணி பகுதியில், மீன்பிடி அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவி மூலம் அமைக்கப்படும் கட்டடமானது வட்டவான், காயாங்கேணி, இறாஓடை, ஆலங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 120 மீன்பிடியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இக்கட்டடம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் சிறில் அண்டன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
கடந்த காலத்தில் இக்கட்டடம் அமையப்படவுள்ள இடமானது இலங்கை இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதியாகும். இதனால் மீனவர்களை அந்தப்பக்கம் செல்லவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

எனினும் இங்குள்ள மீனவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு மீன்பிடித் துறைமுகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தப்பகுதியில் முதல் கட்டடமாக 20 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மீனவ கட்டடடம் நிறுவப்படவுள்ளது.

கட்டடம் கட்டுவதற்கு ஆற்று மண்ல் எனத் தெரிவித்து உவர்த்தன்மையான தரமற்ற மணலை யாருக்கும் தெரியாமல் அதிகாலை 4.30 க்கு கொண்டுவந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

இக்கட்டடத்தை அமைப்பதற்கு மாங்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் ஒப்பந்தம் செய்த போதிலும், அதனை மறைமுகமாக சகோதர இனத்தவர்களுக்கு வழங்கவுள்ளதாக சபை உறுப்பினர் சிறில் அண்டன் குற்றம் சுமத்தினார்.

பல்லாண்டுகாலம் நிலைத்திருக்க வேண்டிய கட்டடத்தை இவ்வாறு ஒப்பந்தக்காரர்களினால் தரமற்ற முறையில் நிர்மானிக்க முற்படுவதை பிரதேச செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வாகனேரிக் குளத்தில், அரசியல் செல்வாக்கினால் சிலர் சட்டவிரோத மீன்பிடி நடடிக்கைகளில் ஈடுபடுவதால், அக்குளத்தை நம்பி ஜீபனோபாயத் தொழில் செய்யும் ஏனைய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக வாகனேரி மீன்பிடிச் சங்கத்தின் செயலாளர் வி.ஓவியராசா கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.