வடமாகாணம்

மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் எலும்புக்கூடுகள் மீட்பு

அகழ்வுப் பணிகள் முடிவடையும் வரை வளாகத்தை கையளிக்க முடியாது- நீதவான்
பதிப்பு: 2018 செப். 15 12:51
புதுப்பிப்பு: செப். 15 14:14
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதொச விற்பனை நிலைய வளாகத்தில் உள்ள போர்க்கால மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் 71 ஆவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. கைகால்கள் பிணைக்கப்பட்டவாறு மூன்று எலும்புக்கூடுகள் தென்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். புதைகுழி அகழ்வுப் பணிகள் வியாழக்கிழமை இடம்பெற்றபோது கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறுகின்றனர். அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் உரிய முறையில் அடக்கம் செய்யப்படவில்லையெனவும் மீட்ப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
 
அத்துடன் கைகால்கள் குறுக்காக பிணைக்கப்பட்ட நிலையில் எலும்புக் கூடுகள் காணப்படுவதால் சடலங்கள் அவசர அவசரமாக புதைகுழைியில் போடப்பட்டிருக்கலாம் என மீட்புப் பணியாளர்கள் சந்தேககிக்கின்றனர்.

இதுவரை அடையாளம் காண்ப்பட்ட அனைத்து எலும்புக் கூடுகளும் ஆடைகளின்றி புதைக்கப்பட்ட சான்றுகளே அதிகமாக இருந்தன. குறிப்பிட்ட சம்பவம் ஒன்றின் பின்னர் கொல்லப்பட்டவர்களின் அனைத்து சடலங்களும் நிர்வாணமாகவே புதைக்கப்பட்டிருந்ததாக மீட்கப்பட்ட எலும்புக் கூடுளில் இருந்து அறிய முடிவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை நூற்றி இருபத்தாறு முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் நூற்றி இருபது எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவின் படி புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பொதியிடப்பட்டுள்ளன.

போர்க்கால புதைகுழி அகழ்வுப் பணிகள் மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி சமீந்த ராஜபக்சவின் தலைமையில் காலை 7 மணியில் இருந்து 4.30 வரை இடம்பெற்றன.

அகழ்வுப்பணிகள் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா உத்தரவின்படி எதிர்வரும் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த புதன்கிழமை மாலை மன்னார் மாவட்ட நீதிமன்றில் போர்காலப் புதைகுழி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று, மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குணபாலன், கொழும்பில் செயற்படும் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பில் ஆஜராகி வரும் சட்டத்தரணி ஏ.ளு.நிரஞ்சன் உட்பட சதொச விற்பனை நிறுவன பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முழுமையாகப் பூர்த்தியாகும் வரை சதொச விற்பனை நிறுவன வளாகத்தை முகாமையாளரிடம் வழங்கமுடியாதென நீதவான் ரி.சரவணராஜா கலந்துரையாடலின்போது கூறினார்.

சதொச விற்பனை நிலைய நிர்மாணப்பணிகளை முன்னெடுக்க வேண்டுமானால் மன்னாரில் பிரிதொரு காணியை பெற்றுக்கொள்ளுமாறும் இந்தக் கலந்துரையாடலில் நீதவான் ஆலோசனை வழங்கினார்.

மீட்கப்படும் எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு அன்றைய தினத்திலேயே நீதிமன்றத்தில் இல்ங்கைப் பொலிசாரினால் சட்ட வைத்திய அதிகாரியின் அனுமதியுடன் கையளிக்கப்பட வேண்டும் எனவும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.