யாழ்ப்பாணத்தில் இருந்து

போதைப் பொருட்களை கொழும்புக்குக் கடத்தும் தளமாக வடமராட்சிக் கிழக்கு- மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம் முறைப்பாடு

இலங்கைக் கடற்படையினர் பாதுகாப்பு வழங்குவதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 செப். 30 14:17
புதுப்பிப்பு: செப். 30 15:17
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான வடமாகாணம யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் போதைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்படுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். கடற் பிரதேசத்தின் ஊடாக வடமராட்சி கிழக்கு கடற்கரையில் போதைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து இலங்கைப் பொலிஸாரின் பாதுகாப்புடன் வேறுறொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாக யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கூறுகின்றனார். வடமரட்சி கிழக்கு கடற்கரையை போதைப் பொருட்களை இறக்குவதற்கான தளமாகப் பயன்படுத்துவதாகவும் இலங்கைக் கடற்படை மீதே சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறினார். வடமராட்சி கடலில் கடந்த வாரம் போதைப் பொருட்களுடன் படகு கைப்பற்றப்பட்டு சில நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
இலங்கைப் பொலிஸாரும் அதனை உறுதிப்படுத்தியிருந்தனர். ஆனால் பின்னர் என்ன நடந்தது என்று தகவல் எதுவும் இல்லை. கைது செய்யப்பட்ட நபர்களும் வெளியில் நடமாடித் திரிகின்றனர்.

ஆகவே, இலங்கைக் கடற்படையினரும் இலங்கைப் பொலிஸாரும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். போதைப் பொருட்கள் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் ஊடாகக் கடத்தப்படுவதாக பிரதேச மக்கள் ஏலவே முறைப்பாடு செய்திருந்தனர்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் சிங்கள மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடித் தொழில் ஈடுபடுகின்றனர். சுருக்கு வலைகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் கடலட்டைகளும் சட்டத்திற்கு முரணாகப் பிடிக்கப்படுகின்றன.

ஆகவே, இவ்வாறான சட்டவிரோத மீன்பிடித்தொழிலுக்கு இலங்கை அரசாங்கம் மறைமுகமாக அனுமதி வழங்கி, அதன் மூலம் போதைப் பொருட்களையும் கடத்துகின்றதா என அவர் கேள்வி எழுப்பினார்.

வவுனியாவில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பொற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

இலங்கைக் கடற்படையும், இலங்கைப் பொலிஸாரும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனைக்கு ஏற்ற முறையில், சிங்கள மீனவர்களுக்கு சட்டவிரோத மீன்பிடிக்கு அனுமதியளிப்பதாக பகிரங்கமாகவே அவர் குற்றம் சுமத்தினார்.

போதைப் பொருட்களைக் கடத்துவதற்கான மூலோபாய பிரதேசமாக வடமராட்சிக் கிழக்கு பயன்படுத்தப்படுவதால், இந்தப் பிரதேசத்தில் வாழும் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியிலும் போதைப் பொருள்பாவனை ஊக்குவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமிழர் தாயகத்தில் உள்ள இளைஞர்கள், மாணவர்களை திசைதிருப்பும் நோக்கில் இலங்கை அரசாங்கம் இவ்வாறான போதைப் பொருள்பாவனைகளை ஊக்குவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் படி போதைவஸ்துப் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரச நிர்வாகம் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக, வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் இலங்கைப் படையினா், இலங்கைப் பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் போதைப் பொருள்பாவனை ஊக்குவிக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழர் தாயகப் பகுதிகளில் பொருளாதாரங்களையும் சுரண்டி, போதைப் பொருள் பாவனைகளையும் ஊக்குவித்து இளைஞா்கள், மாணவா்களின் சிந்தனைகளை சீரழிப்பதே மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் நோக்கம் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஏலவே குற்றம் சுமத்தயிருந்தமை குறிப்பிடத்தக்கது.