வடமாகாணம்

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மழை காரணமாக இடைநிறுத்தம்- கூடாரம் அமைக்கத் தீர்மானம்

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் நிதி வழங்க இணக்கம்
பதிப்பு: 2018 ஒக். 01 18:39
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 01 22:46
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் சதோச புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த ஒரு வாரத்தின் பின்னர் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று பெய்த திடீர் மழை காரணமாக கூடார வசதியின்மையினால் அகழ்வுப் பணிகள் தடைப்பட்டுள்ளன. மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த 24 ஆம் திகதி போயா தினத்திலிருந்து இன்று முதலாம் திகதி வரை மன்னார் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் குறித்த மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்ட நீதவான் தலைமையில் நடைபெற்றிருந்தது. எதிர்வரும் காலங்களில் பருவமழை பெய்யவுள்ள நிலையில் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
 
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், விசேட சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், இலங்கைப் பொலிஸ் தடயவியல் பிரிவு அதிகாரிகள், கொழும்பில் இயங்கும் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதைகுழி உள்ள பகுதியில் பாரிய கூடாரமொன்றினையும், புதைகுழிக்குள் நீர் உட்செல்லாதவாறு மண் அணை ஒன்றினையும் பருவமழைக்கு முன்னதாக அமைப்பதற்கான நிதியை வழங்குவதாக காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலக அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் உறுதியளித்தனர்.

அதன் பிரகாரம் நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மன்னார் மாவட்ட செயலகம் குறித்த நிதியைக் கொண்டு கூடாரத்தையோ மண் அணையையோ இன்று வரை அமைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கப்பட்டதன்படி கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தால், இன்று மழை பெய்தபோது அகழ்வுப் பணியை நிறுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லையென அதிகாரிகள் கூறுகின்றனர்.

செப்ரெம்பர் மாதம் முதல் வாரம் வரை நூற்றிப் பதினொரு மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 97 மனித எலும்புக் கூடுகள் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பொதியிடப்பட்டிருந்தன.

செப்ரெம்பர் மாத இறுதியில் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் 141 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.