கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

வாகரையில் காணி அபகரிப்புத் தொடர்பாகப் பேசுவதை அமைச்சர் ஒருவரின் அதிகாரிகள் தடுப்பதாக முறைப்பாடு

கொலை அச்சறுத்தல் விடுப்பதாகவும் பிரதேச சபை உறுப்பினர் கூறுகிறார்
பதிப்பு: 2018 ஒக். 03 12:42
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 03 21:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப்பிரிவில் தமிழ் மக்களின் வயல்காணிகள், மேட்டுநிலக் காணிகள், குடியிருப்பு காணிகள் வேறு இனத்தவர்களினால் அபகரிகப்படுகின்றன. காணி்கள் அபகரிக்கப்படும் இடங்களுக்குச் சென்று சுமுகமான நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் வேளையில், கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் அதிகாரிகள் சிலரால் அச்சுறுத்தப்படுவதாக வாகரை பிரதேச சபை உறுப்பினர் சிறில் அண்டன் தெரிவித்தார்.நேற்றுச் செவ்வாய்கிழமை வாகரையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் கூட்டத்திலும் சில அதிகாரிகள் தன்னை அச்சுறுத்தியதாகவும் அவர் கூறினார். காணி அபகரிப்புத் தொடர்பான பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லையென்றும் உரத்த தொனியில் அதட்டிக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மக்கள் பிரதிநிதியான எங்களை காணி அபகரிப்பு இடம்பெறும் இடத்திற்கு வரவேண்டாம் என்று சொல்வதற்கு அமைச்சரின் அதிகாரிகளுக்கு என்ன அதிகாரம் உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்புச் செய்யும்போது தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், கொலை செய்யப்படுவாய் என்ற தொனியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் சிறில் அண்டன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் குடியிருக்கும் உறுதி, ஒப்பம் உள்ள காணிகளை அபகரிக்கும் போது மக்கள் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துகின்றார்கள். தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பைத் தடுப்பதற்காகவே, சம்பவ இடத்திற்குத் தான் செல்வதாகவும் உறுப்பினர் அண்டன் தெரிவித்தார்.

வாகரைப் பகுதியில் இடம்பெறும் சம்பவத்திற்கு வாழைச்சேனையில் உள்ள இலங்கைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டும் என அபிவிருத்திக் குழுத் தலைவர், அமைச்சர் அமீர் அலி தெரிவிப்பதில் சந்தேகம் உள்ளதாக சிறில் அன்டன் தெரிவித்தார்.

அமைச்சரும் அமைச்சரின் அதிகாரிகளும் செயற்படும் முறை தொடர்பாக உரிய இடத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அடுத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசவுள்ளதாகவும் சிறில் அன்டன் குறிப்பிட்டார்.