இலங்கை போக்குவரத்துச் சபை

மஹிந்த ராஜபக்ச 140 மில்லியன் செலுத்த வேண்டும்

மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் திடீர் உத்தரவு
பதிப்பு: 2018 மே 18 14:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 27 14:33
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு செலுத்தவேண்டிய 140 மில்லியன் ரூபாய் நிதியை செலுத்த வேண்டும் என வர்த்தக பிரிவுக்கான கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
இந்த தொகையை ஒரே நேரத்தில் முழுமையாக எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் கையளிக்க வேண்டும் என்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்க டி ஜயரட்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கை போக்குவரத்துச் சபைக்கச் சொந்தமான பேரூந்துகளை முன்னாள் ஜனாதிபதிபதியின் உத்தரவுக்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் பயன்படுத்தியிருந்தது.

இந்த நஷடஈட்டை பெற்றுத்தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான முகாமையாளர், கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

தனிப்பட்ட முறையில பேரூந்துகளை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியமையால் அதற்குரிய கட்டணங்களை செலுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது என்றும் ஆனாலும் இதுவரை அந்தக் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி செலுத்தப்பட வேண்டிய 140 மில்லியன் ரூபாய் நிதியை ஜூலை மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.