ஈழவிடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த

மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகள் ஆரம்பம் - முள்ளியவளை துயிலுமில்லத்தில் சிரமதானம்

உறவுகளை நினைவேந்துவதற்கு தயாராகின்றனர் தாயக மக்கள்
பதிப்பு: 2018 ஒக். 20 22:51
புதுப்பிப்பு: ஒக். 20 23:11
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத்தமிழ் மக்களது விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களது நினைவேந்தல் எதிர்வரும் கார்த்திகை மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இதனை முன்னிட்டு மாவீரர்களது வித்துடல்கள் புதைக்கப்பட்ட துயிலுமில்லங்களைத் துப்புரவு செய்யும் பணிகள் தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளன. இன அழிப்பு போரின் போது 2009 ஆம் ஆண்டு அப்போதிருந்த இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட துயிலுமில்லங்கள் தற்போது புதர்மண்டிக் காணப்படுகின்றன. இதனால் முல்லைத்தீவு - முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல காணியில் துப்புரவுப் பணிகள் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
 
பொது மக்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைாசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிதேசசபை உறுப்பினர்கள் என பலர் ஒன்றுகூடி துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.

தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுட்டிக்கப்படுகின்றது.

ஆயுத ரீதியான இன அழிப்புப் போர் நிறைவடைந்த பின்னர் 7 வருடங்களாக தங்கள் உறவுகளை நினைவுகூர முடியாதவர்களாக தமிழ் மக்கள் தவித்து வந்தனர்.

எனினும் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு பொது மக்களால் மாவீரர் துயிலுமில்லங்கள் துப்புரவாக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

அதேபோன்று இம்முறையும் தமது உறவுகளை நினைவுகூர்வதற்கு தயாராகி வருவதாக ஈழத்தமிழ் மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.