பேரினவாத சிங்கள கட்சிகளின் ஒன்றினைந்த செயற்பாடுகள்

முரண்பாடுகளில் உடன்பாடு- மஹிந்த , சந்திரிக்கா. மைத்திரி ஒரே அணியில், வெளிச் சக்திகள் பின்னணியா?

உண்மையை சொல்வோம் என்ற தொனியில், பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியும் அறிவிப்பு
பதிப்பு: 2018 ஜூன் 04 10:25
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 04 16:06
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தலைமையாகக் கொண்ட, ஐக்கியதேசியக் கட்சி கூறியுள்ள அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், இதுவரையும் முரண்பாடுகளுடன் செயற்பட்டு வந்த, முன்னாள் ஜனாதிபதிகளான, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச, ஆகியோர் கட்சியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மைத்திரி ரணில் அரசாங்கத்தின் நிலைமை குறித்தும், மஹிந்த ராஜபக்ச அணியின் மக்கள் செல்வாக்கின் பின்னணியில் மேற்குலகநாடுகள், இந்த அரசியலை. நகர்த்தி்ச் செல்லுகின்றதா எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தமக்குள் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லையென மைத்திரிபால சிறிசேன வேறு கூறியுமுள்ளார்.

அமெரிக்க. காங்கிரஸ் குழு உறுப்பினர்கள், மற்றும் அமெரிக்க, சீன படைகளின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கடந்த வாரம் கொழும்புக்கு வருகைதந்து, பலரை சந்தித்து உரையாடிய பின்னர், கொழும்பு அரசியலில் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேவேளை, இன அழிப்பு போர் என ஈழத்தமிழர்களால் வர்ணிக்கப்படும், இறுதி யுத்தத்தை நடத்திய, இந்த பேரினவாத சிங்கள கட்சிகளின் மூத்த தலைவர்களை ஒன்றுபடுத்தி, அடுத்த ஆட்சி மாற்றத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்து, தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் வலுப்பொற்றுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்காக, கட்சியின், நிறைவேற்று சபை மற்றும் கட்சியின் அகில இலங்கை செயற்குழு ஆகியன, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பின் புநகர் பகுதியான, பத்தரமுல்லையில் உள்ள அபேகம வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடியது.

முற்கட்டமாக இடம்பெற்ற அந்தக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச ஆகியோர், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் ஒன்றாக கூடி, கட்சியின் மறுசிரமைப்பு குறித்து கலந்துரையாடினர். தற்காலிகமாக கட்சியின் முக்கிய பதவிகள் ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் வழங்கப்பட்டன.

இதுவரையும் முரண்பாடுகளுடன் செயற்பட்டு வந்த, சந்தரிக்கா, மஹிந்த ராஜபக்ச ஆகியோர், கட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு உடன்பட்டனர். எதிர்காலத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒருங்கிணைத்து செயற்படுத்த அனைவரும் ஒன்னைந்து செயற்படுவது எனவும் உறுதிமொழி வங்கப்பட்டதாக. தற்காலிகமாக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ரேஹண லக்ஸ்மன் பியதாச இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இந்த நிலையில், உண்மையைக் கூறுவோம்' எனும் தொனிப்பொருளில், இலங்கை முழுவதிலும் பிரச்சார நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி. அறிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்திய நாள் முதல் இன்று வரையிலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக, மக்களுக்கு தெளிவூட்டும் வகையிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கொழும்பில் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் பணி, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின்படி கட்சியின் பிரசார செயலாளர் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சார பணி. கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்தும் வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, 1983ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்த இரு பிரதான சிங்கள பேரினவாத கட்சிகளும் மாற்றி மாறி ஆட்சியமைத்ததுடன், போரை இந்தியா மற்றும் மேற்குலகநாடுகளின் நிதியுதவியுடனும். இராணுவ ஒத்துழைப்புடனும் நடத்தியிருந்தன.

இந்த நிலையில், தமது பேரினவாத அரசியல் போட்டிகளுக்கு மத்தியிலும் ஈழத் தமிழர்களின் இறைமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை ஆகிய விடயங்களை சிதைப்பதிலும். ஓரங்கட்டுவதிலும், ஒன்றினைந்து செயற்பட்ட வரலாற்றையே காணமுடிந்ததாக தமிழ் மக்கள் பேரவையின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு மற்பகுதியில், ஆட்சி மாற்றம் ஒன்றிற்கான தேர்தல் நடைபெறலாம் என ஏதிர்பார்க்கப்பட்டு, பிரச்சாரங்களை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

சுந்திரிக்கா. மஹிந்த ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கி, கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றியபோது மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.

ஆகவே, அமெரிக்க காங்கிரஸ் குழு உறுப்பினர்கள், மற்றும் அமெரிக்க, சீன படைகளின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கடந்த வாரம் கொழும்புக்கு வருகைதந்து பலரை சந்தித்து உரையாடிய பின்னர், கொழும்பு அரசியலில் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று, அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் கடந்த வாரம் சந்தித்து கலந்துரையாடியுமுள்ளனர்.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் 252 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசுக்கு கடனாக வழங்க முடிவு செய்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. சீனா அபிவிருத்தி வங்கியும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளதாக இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.