நிரல்
மே 22 15:29

குருநகர் இறங்குதுறையில் இருந்து கடற்படை வெளியேற வேண்டும்; பிரதேச செயலகம் தீர்மானம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் குருநகர் இறங்கு துறைக்கு அருகில் நிலை கொண்டுள்ள இலங்கை கடற்படையினர் இரண்டு மாதங்களுக்குள் வெளியேற வேண்டும் என யாழ்ப்பாண பிரதே செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மே 22 15:08

பத்திற்கும் மேற்பட்டோர் பலி; தமிழ்நாட்டில் மக்கள் போராட்டம் மீது காவல்துறை வன்முறை

(தூத்துக்குடி, தமிழ்நாடு) தூத்துக்குடியில் (தமிழ்நாடு) இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து மக்களின் அறப்போராட்டம் நடைபெற்று வந்த வேளையில், இன்று (மே 22, 2018) தமிழக அரசின் காவல்துறையினர் அரச வன்முறை யுக்தியை கையாண்டு போராட்டத்தை சிதைக்க முற்பட்டதில் பத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், மேலும் 65 பேர் படுகாயம் அடைந்து தூத்துகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். அறவழிப்போராட்டம் இன்று 100வது நாளை எட்டிய வேளையிலேயே, வன்முறையை அரச அமைப்பினர் கையிலெடுத்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மே 22 11:53

தமிழ் இளைஞன் கொலை, ஐந்து பொலிஸாரின் பிணை நிராகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில், தடுத்து வைக்கப்பட்டடிருந்த, தமிழர் ஒருவரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்ய்ப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திக்க பண்டார என்ற பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐந்து பேரின் பிணை மனு கோரிக்கையை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மே 22 10:51

அரசியற் கைதி என்ற பதத்தைத் தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது அரச இனவாதமே- அருட் தந்தை சக்திவேல்

(வவுனியா, ஈழம்) தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லையென இலங்கை அரசாங்கம் கூறியுள்ளமை வாக்குறுதியை மீறும் செயல் என மனித உரிமைச் செயற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் கூர்மை செய்தி தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
மே 21 23:04

மூவாயிரத்தி நூறு குடும்பங்கள் பாதிப்பு, நான்குபேர் பலி; பலா் வெளியேற்றம்

(வவுனியா, ஈழம் ) கடுமழையினால் மூவாயிரத்தி 438 குடும்பங்களைச் சேர்ந்த பதின்மூவாயிரத்தி ,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்குபேர் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தென், மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள சுயாதீன செய்தியாளர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.
மே 21 12:30

ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்த முடிவு

(வவுனியா, ஈழம்) இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்தப்படவிருந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை பிற்போடுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதன் அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. 2018 செப்ரெம்பர் மாதத்துடன் பதவிக் காலம் முடிவடையவுள்ள வடமாகாண சபை உள்ளிட்ட ஐந்து மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்திவைத்து, அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் கூர்மைக்குத் தெரிவித்தன. மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் தருணத்தில் அவற்றின் நிர்வாகத்தை ஆளுநர்களின் கீழ் கொழும்பு கொண்டுசெல்லவுள்ளதாகவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார்.
மே 21 05:18

மயானங்களையும் விட்டுவைக்காத இலங்கை இராணுவம்

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்களை விஸ்தரிக்கும் நோக்கில் ஈழத்தமிழர்களின் பூர்விக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் இலங்கைப் படைத்தரப்பினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பு அரசுடன் இணக்க அரசியலில் ஈடுபடும் தமிழ் அரசியல்வாதிகள், குறிப்பாக தமிழரசுக் கட்சித் தலைமையினர், இந்த நடவடிக்கைக்கு எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 20 23:36

புதிய யாப்புக்கான முதல் வரைபிலேயே அரசியல் தீர்வு புறக்கணிப்பா?

(வவுனியா, ஈழம்) புதிய அரசியல் யாப்புக்கான முதலாவது வரைபு வழிகாட்டல் குழுவிடம் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளர்கள் கூர்மை இணையத்திற்குத் தெரிவித்தனர்.
மே 20 22:28

மலையகத்தில் எட்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கைத் தீவின் மலையகப் பிரதேசங்களில் தொடரும் மழையினால் எட்டு மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மே 20 18:01

காதல் சோடி தூக்கிட்டுத் தற்கொலை, காதலி மூன்று மாத கர்ப்பிணி

(மட்டக்களப்பு, ஈழம்) காதலுக்கு இரு வீட்டாரின் எதிர்ப்பினால் இளம் காதலர் சோடி ஒன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளமை மட்டக்களப்பு மாவட்த்தின் திகிலிவெட்டை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த சம்பவம் 18ஆம் திகதி வெள்ளி அன்று நடைபெற்றுள்ளது.