செப். 18 18:51
(மட்டக்களப்பு, ஈழம்)
இஸ்ரேல் நாட்டின் குடிகளில் இருபது விகிதத்துக்கு மேற்பட்டோர் யூதர் அல்லாத அரேபியர்கள். இந்த வருடம் வரை அங்கு அரேபிய மொழிக்கு இரண்டாவது உத்தியோக பூர்வ மொழி என்ற அந்தஸ்து இருந்துவந்தது. ஆனால், யூலை மாதம் கொண்டுவரப்பட்ட அடிப்படைச் சட்டம் (Basic Law) என்ற சட்டவாக்கம் இந்த அந்தஸ்தை யாப்பு ரீதியாகக் குறைத்துள்ளது. தற்போது ஹீப்ரு (எபிரேயம்) மட்டுமே அரச மொழி. அடுத்தபடியாக, இன ரீதியான யூதக் குடியேற்றங்களைப் பரப்புதல் என்ற கோட்பாட்டை தேசியப் பெறுமானமாக்கி (national value) குறித்த சட்டவாக்கம் பெருமிதம் காண்கிறது. அரச காணிகளில் யூதக் குடியேற்றங்களுக்கு முன்னுரிமையும் தனித்துவமும் பேணப்படல் வேண்டும் என்பதே இதன் உட்கிடக்கை என்பதைக் காண்க. ஆக, இஸ்ரேல் கொண்டுவரும் இப்பரிமாணத்தின் சர்வதேச வியூகம் தான் என்ன?