செப். 17 09:38
(முல்லைத்தீவு, ஈழம்)
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாக எந்தக் கருத்துநிலையை முரசறைந்து வலியுறுத்துகிறார்கள் என்பது தென்னிலங்கைக்கும் உலக மட்டத்துக்கும் அவசியமானது. டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்று சலுகைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் வியாதி ஒரு புறமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையைச் சீர்குலைத்து சுமந்திரன் முன்னெடுத்த சந்தர்ப்பவாத அரசியல் நோய் மறுபுறமுமாகக் காணப்பட்ட இருதலைக் கொள்ளி நிலையை விட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்மறையான ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கும் பொதுச்சபையின் பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கும் இடையான புதிய இருதலைக் கொள்ளி நிலை உருவாகியுள்ளது.