கட்டுரை: விளக்கக்கட்டுரை: நிரல்
ஒக். 02 18:47

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த பொதுக்கட்டமைப்பினர் பொறுப்புக்கூறலுக்குரியவர்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) 'தானாடா விட்டாலும் தசையாடும்' என்பது போல் ஈழத்தமிழர் தேசத்தினர் மீண்டும் தமது உரிமைக்காக எழுச்சிபெற்று அணிதிரள்வார்கள் என்பதை ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தின் ஊடாக நிறுவினார்கள். இருப்பினும், வடக்கு-கிழக்கில் மேலதிகமாக முப்பதினாயிரம் வாக்குகள் பா. அரியநேத்திரனின் சங்குச் சின்னத்துக்குக் கிடைத்திருந்தால் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு ஜனாதிபதியாகியுள்ள அநுர குமார திசாநாயாகாவை விட தமிழர் தாயகத்தில் சங்குச் சின்னம் முன்வைத்த கொள்கைக்குக் கூடுதலான அங்கீகாரம் இருப்பது வாக்குகள் ஊடாக உறுதிப்படுத்தப்படும் நிலை தோன்றியிருக்கும். சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியைக் கனதியாகச் சொல்ல முடிந்திருக்கும்.
செப். 25 18:34

ஈழத் தமிழர் தேசத்துக்குத் தனித்துவமான சமவுடைமை இயக்கம் காலத்தின் தேவை

(வவுனியா, ஈழம்) 'தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூதுகவ்வலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்கு இவை அனைத்தும் துணைபோயின.
செப். 17 09:38

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்மறைத் தன்மைக்கு மாற்றாக முன்வைக்கப்படும் பொதுச்சபையின் நேரடித் தன்மை

(முல்லைத்தீவு, ஈழம்) ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாக எந்தக் கருத்துநிலையை முரசறைந்து வலியுறுத்துகிறார்கள் என்பது தென்னிலங்கைக்கும் உலக மட்டத்துக்கும் அவசியமானது. டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்று சலுகைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் வியாதி ஒரு புறமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையைச் சீர்குலைத்து சுமந்திரன் முன்னெடுத்த சந்தர்ப்பவாத அரசியல் நோய் மறுபுறமுமாகக் காணப்பட்ட இருதலைக் கொள்ளி நிலையை விட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்மறையான ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கும் பொதுச்சபையின் பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கும் இடையான புதிய இருதலைக் கொள்ளி நிலை உருவாகியுள்ளது.
ஓகஸ்ட் 10 14:28

ரணிலின் வேட்பாளர் வாக்குறுதியும் சுமந்திரனின் தனிநபர் பிரேரணையும்

(கிளிநொச்சி, ஈழம்) ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் தரப்பினர் சிலரிடம் ரணில் கையளித்த கையொப்பம் எதுவுமற்ற இரண்டுபக்க ஏழு அம்ச ஆவணம் சில வட்டாரங்களுக்குள் கசிந்துள்ளது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் தனித்துவமான இறைமையையும் முழுமையாகப் புறக்கணித்து அவர்கள் எந்த ஒரு வகையிலும் தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்க இயலாதவாறு ஒற்றையாட்சிக்குள் முடக்கப்படுவதற்கு இடமளித்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் தொடர்ச்சிதான் உப்புச்சப்பு எதுவுமற்ற பதின்மூன்றாம் திருத்தம். அதைக்கூட முழுமையாகச் செயற்படுத்த இடமளிக்காமல் இதுவரை முடக்கியுள்ள இலங்கை ஒற்றையாட்சியில் மாறிமாறி அரசபீடம் ஏறும் ஆட்சியாளர்கள் தமிழர் வாக்குகளைப் பெறுவதற்காகப் பிச்சாபாத்திரம் ஏந்தும் போது மட்டும் அதை அமுலாக்குவது போலச் சில வாக்குறுதிகளைத் தருவது வழக்கம்.
டிச. 17 19:04

இமாலயப் பிரகடனம் - பின்னணியும் வரலாறும்

(வவுனியா, ஈழம்) அதிகளவு சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை ஒற்றை ஆட்சி நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் தேசியச் சிக்கலுக்குரிய தீர்வை முன்வைக்க முடியாது என்பதாலேயே 'ஈழத்தமிழர் தேசியம்' என்ற கோட்பாடு எழுந்தது. சிங்களவர் ஈழத்தமிழர் ஆகிய இரு அரசியல் சமூகங்களும் தேசங்களாக ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட்டாக நின்று நிர்வாக அதிகாரத்தை அல்ல ஆட்சி அதிகாரத்தைப் பங்கிடுவதன் மூலமே இனப்பிரச்சினைக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை எட்ட முடியும். இதற்கான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாகச் செயற்பட்டு ஒற்றையாட்சி நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் வியூகங்களுடன் மாத்திரம் இயங்கி வருவதால் மிகவும் பலவீனமான நிலைமை அதலபாதாளமாக வெளித் தோற்றத்துக்குத் தெரிகிறது.