கட்டுரை: நிரல்
மே 25 11:51

இலங்கை தொடர்பான ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அழிப்பு

இலங்கை சார்ந்த ஏறக்குறைய 200 ஆவணங்களை, குறிப்பாக விடுதலைப்புலிகளின் எழுச்சிக்காலத்தில் பிரித்தானியாவின் உளவுத்துறையும் விசேட விமானத்துறையும் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு அறிவுரைகள் கொடுத்தது பற்றிய ஆவணங்களை, பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு அழித்துள்ளதென்பதை பில் மில்லர் எனும் மனித உரிமை ஆய்வாளர் பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையான கார்டியன் பத்திரிகையில் ஆதார பூர்வமாக அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், பிரித்தனியா அரசு இலங்கை அரசுடன் அக்காலத்தில் இணைந்து வேலை செய்தது பற்றிய ஆதாரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. பில் மில்லரின் கட்டுரையின் உள்ளடக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது.
மே 24 12:38

வங்கிக்கிளையில் தமிழ் ஊழியர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தது தேசவிரோதமாம்!

(யாழ்ப்பாணம், ஈழம்) முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கிக் கிளை ஒன்றின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள ஏச்.என்.பி கிளையில் கடந்த 18 ஆம் திகதி முகாமையாளர்களும் ஊழியர்களும் ஒன்றுசேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர். இந்த நினைவேந்தல் தொடர்பான நிழற்படம் உள்வட்டார சமூகவலை இணைப்புகளில் பகிரப்பட்டதும் அதைக் கண்ட பேரினவாதிகள் வங்கிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள வங்கியின் தலைமையலுவலக உயரதிகாரிகள் கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தன.
மே 24 02:08

இந்திய ஒன்றிய அரசு தமிழ் நாட்டில் காவல்துறை வன்முறைக் கலாச்சாரத்தை தூண்டிவிடுகிறதா?

(சென்னை, தமிழ் நாடு) தூத்துக்குடியில் அறவழியில் திரண்டு 100 நாட்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருந்த பெருந்திரள் மக்கள், அறவழிப்போராட்டத்தின் நூறாவது நாளை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்ற, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற வேளையிலேயே, கல்வீச்சு சம்பவங்களும் காவல்துறையினரின் கட்டுபாடற்ற வன்முறையினாலும், காவல்துறையினரின் தொடர் துப்பாக்கி பயன்பாட்டாலும் 12 ற்கும் மேற்பட்டோர் படுகொலையாகினர். 65 ற்கும் மேற்பட்டோர், மீள முடியா உடல்பாதிப்பில் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர். மே 22 ஆம் நாள் இரவு தூத்துக்குடியில் இருக்கும் சில மீனவ கிராமங்களில் காவல்துறை தொடர் தேடுதல் வேட்டைகளை நடத்தி அப்பாவி மக்களை அச்சுறத்திய சம்பவமும் நடந்தேறியுள்ளது.
மே 23 13:07

மதங்கொண்ட யானைகள் சம்பூரை அண்மித்த காடுகளுக்குள் ஏவப்படுகின்றனவா?

(திருகோணமலை, ஈழம்) திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் கிழக்கு பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி இரவு வேளையில் மதங்கொண்ட யானைகள் வந்து செல்கின்றன. வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களத்தினது ஆதரவோடு ஆள் அரவமின்றி இரவு வேளைகளில் இந்த யானைகள் தென்பகுதிக் காடுகளில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளை நோக்கிய காடுகளுக்குள் கொண்டுவந்து விடப்படுவதாக சம்பூர் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இன அழிப்புப் போரினாலும், தொடரும் கட்டமைப்பு, பண்பாட்டு இன அழிப்பு நடவடிக்கைகளாலும் பாதிக்கப்படும் மக்கள், காட்டு விலங்குகளும் தம்மை வேட்டையாடுவது குறித்து விசனம் கொண்டுள்ளார்கள்.
மே 19 15:57

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, வாகரை, கிரான், போன்ற பல பிரிவுகளில் வாழும் மக்கள் கட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்கி பெரும் துயரங்களை அனுபவிப்பதாக முறையிடப்பட்டுள்ளது.
மே 18 19:01

இனப்படுகொலை என்பதை சர்வதேசம் ஏற்க வேண்டும்

(கிளிநொச்சி, ஈழம்) இறுதிப் போரின்போது சாட்சியங்கள் இல்லாத நிலையில் அல்லது சாட்சியங்களை உள்விடாத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகள் மூலம் சர்வதேச சமூகம் இலங்கை அரசினால் தவறாக வழிநடத்தப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.