வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்

பொன்னாலையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

பெருமளவானோர் பங்கேற்பு
பதிப்பு: 2018 செப். 30 21:25
புதுப்பிப்பு: செப். 30 21:51
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு இடம்பெற்ற போராட்டத்தில் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர். பொன்னாலை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது. தமிழர் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருக்கும் பொன்னாலையில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் மைத்திரி- ரணில் அரசாங்கம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
கைதிகளின் விடுதலைக்காக தீக்குளிப்பேன் என போராட்டத்தில் கலந்துகொண்ட 70 வயதான வே.தவமணி என்ற வயோதிபப் பெண் ஒருவர் கண்ணீர்மல்கக் கூறினார்.

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர், மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினர்.

நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமே இன்றி பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கும் சுலோக அட்டைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். யாழ்ப்பாணம் வவுனியா, மன்னார் கொழும்பு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் யாழ் நகருக்கு வெளியே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆசிவேண்டி இன்று பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடும் இடம்பெற்றது.

அதேவேளை, உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

நாளை திங்கட்கிழமை வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.