நிரல்
ஜூன் 05 12:32

மட்டக்களப்பு எல்லைக் கிராமத்திலிருந்து வெளியேறும் தமிழ் மக்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) கொழும்பு அரசாங்கத்தினால் மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக் கிராம மக்களின் அடிப்படை வசதிகள் வழங்கப்படாமையினால், மக்கள் வெளியேறிவருவதாக கிராமத்தின் மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி ராசமுத்து ரஞ்சி கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு நகருக்கு வடமேற்காக 57 கிலோமீற்றர் தூரத்தில், பொலநறுவை – மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள தமிழ் கிராமமான ஓமடியாமடு கிராமம் கடந்த காலத்தில் ஏற்பட்ட போரினால் மக்கள் முழுமையாக வாழைச்சேனைக்கு இடம்பெயர்ந்தனர்.
ஜூன் 04 23:36

திருமலை இ. மதனின் ‘ஒரு வானம் இரு நிலவு’ நாவல் வெளியாகியது

பாதை மாறிய பயணங்கள், கூக்கூ காகம் ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளை அடுத்து திருமலை இ. மதனின் மூன்றாவது படைப்பாக வெளிவந்துள்ள நாவல் ‘ஒரு வானம் இரு நிலவு’. காதல் கதை ஒன்றினூடாக திருகோணமலை நகரினதும் தம்பலகாமப் பிரதேசத்தினதும் வரலாறு, பண்பாட்டு அம்சங்களோடு, 2000 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் திருகோணமலையில் நிலவிய அரசியல் சூழ்நிலையையும் எடுத்துக்காட்டும் ஓர் நாவலாக இது அமைகிறது. வெளியீட்டு விழாவில் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான மெய்வல்லுநர்ப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஈழத்து வீராங்கனை இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
ஜூன் 04 21:53

தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறது தமிழகம்

(சென்னை, தமிழ் நாடு) தமிழகத்தின் சமூக நீதி கொள்கையினை தகர்த்து, இதுவரை காலமும் தமிழகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மருத்துவத் துறையின் சமத்துவத் தன்மையை சிதைக்கும் விதமாக, இந்திய ஒன்றிய அரசினால் திணிக்கப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நுழைவுத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில், தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா, அகில இந்திய ஒன்றிய அளவில் 12வது இடத்தை பிடித்திருக்கிறார். இருப்பினும், 1,70,000 மாணவ, மாணவிகள் எழுதிய இத்தேர்வில் தமிழகத்தில் 38.7% பேர் தகுதிப் பெற்றிருக்கின்றனர்
ஜூன் 04 15:02

மன்னார் போர்க்கால மனித புதைகுழியை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள் நேரில் பார்வை

(மன்னார், ஈழம்) மன்னார் நகரத்தின் நுழைவாசலில் உள்ள, இலங்கை இராணுவத்தின் முன்னைநாள் உயர்பாதுகாப்பு வலையத்தில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை ஆறாவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போர்க்காலத்து மனிதப்புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம், மேலும், மேலும் வலுப்பட்டு வருவதாக, அகழ்வை தொடர்ச்சியாக பார்வையிட்டு வரும் சட்டத்தரணிகள் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்தனர்.
ஜூன் 04 10:25

முரண்பாடுகளில் உடன்பாடு- மஹிந்த , சந்திரிக்கா. மைத்திரி ஒரே அணியில், வெளிச் சக்திகள் பின்னணியா?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தலைமையாகக் கொண்ட, ஐக்கியதேசியக் கட்சி கூறியுள்ள அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், இதுவரையும் முரண்பாடுகளுடன் செயற்பட்டு வந்த, முன்னாள் ஜனாதிபதிகளான, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச, ஆகியோர் கட்சியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மைத்திரி ரணில் அரசாங்கத்தின் நிலைமை குறித்தும், மஹிந்த ராஜபக்ச அணியின் மக்கள் செல்வாக்கின் பின்னணியில் மேற்குலகநாடுகள், இந்த அரசியலை. நகர்த்தி்ச் செல்லுகின்றதா எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன
ஜூன் 03 03:43

திருகோணமலையில் 459 நாட்களையும் தாண்டித் தொடர்கின்றது

(திருகோணமலை, ஈழம்) கடந்த யுத்த காலத்தின் போது கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரி நடத்தப்பட்டு வருகின்ற போராட்டமானது திருகோணமலையின் உவர்மலையில் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக 459 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் எவ்வித தீர்வுகளுமின்றித் தொடர்கின்றது.
ஜூன் 03 02:45

சர்வதேச நாணய நிதியம் 252 மில்லியன் டொலர் வழங்க தீர்மானம், சீனாவும் உதவி என்கிறார் இலங்கை அமைச்சர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை அரசுக்கு நிதிவழங்கிவரும் சர்வதேச நாணய நிதியம் தற்போது மேலும் 252 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளது. வெள்ளிக்கிழமை கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஆட்சிமாற்றத்துக்கான தேர்ததல் ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சியை சேர்ந்த இலங்கை அமைச்சர் அகிலவிராஜ் காரியவன்ச கொழும்பில் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இராணுவ ஒத்துழைப்புகளும் நிதியுதவிகளும் யாரை நோக்கி யாருக்காக வழங்கப்படுகின்றன என்று தமிழ் அரசியல் அவதானிகள் வினவுகின்றனர்.
ஜூன் 02 19:11

பாரிய மணல் அகழ்வினால் நாசிவந்தீவு மக்களின் குடியிருப்பு பாதிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை விஸ்தரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வினால் ஆற்றங்கரையோரமாக உள்ள சிவன்தீவு (நாசிவந்தீவு) கிராமம் எதிர்காலத்தில் நீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அக்கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். இந்தக் கிராமத்தின் மூன்று பகுதிகளின் எல்லையாக களப்பும் மற்றைய எல்லை கடலாகவும் நான்குபுறமும் நீர் சூழ்ந்த தீவாக இருப்பதால் இங்கிருந்து மணல் அகற்றப்படுவது தீவின் எதிர்காலம் குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
ஜூன் 02 11:19

அமெரிக்க, சீன படை அதிகாரிகள் கொழும்பில்; இலங்கைத்தீவு தொடர்பான கேந்திரப் போட்டிகள் தீவிரம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) அரசியல் மற்றும் இராணுவ செயற்பாடுகளில் எதிரும் புதிருமாக இருக்கின்ற அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவ ஒத்துழைப்புகளை, இலங்கையின் ஒற்றையாட்சி அரசு எவ்வாறு பெற்றுக்கொள்கின்றது என கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையின் முப்படைகளுடனான உறவுகளை மேலும் பலப்படுத்த அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
ஜூன் 01 16:37

மலையகத்தில், மண்சரிவு அபாயம் இருப்பதாக கூறி, காணிகள் அபகரிக்கப்படுவதாக மக்கள் குற்றசாட்டு

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் மலையகத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டிருந்த பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு, இதுவரை நிவாரண உதவிகள் உரிய முறையில் வழங்கப்பட்வில்லை என்றும், தற்காலிகமாக தங்க வைக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளனர்.