நிரல்
ஜூன் 20 16:01

மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்கள்

(வவுனியா, ஈழம் ) வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களை பிரிக்கும் நோக்கில், இலங்கையில் 1941 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்லோயா அபிவிருத்தி திட்டம், முதலாவது சிங்களக் குடியேற்றமாகும். 1949 ஆரம்பிக்கப்பட்ட அல்லைத்திட்டம், 1950 இல் உருவாக்கப்பட்ட கந்தளாய் திட்டம், 1954இல் பதவியாத்திட்டம், முதலிக்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில் 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொறவேவாத்திட்டம், பெரியவிளாங்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில் 1979 ஆம் ஆண்டு கொண்டவரப்பட்ட மகாதிவூல்வௌ திட்டம் என்ற சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில், பிரதேசங்களை தூண்டு துண்டாக உடைக்கும் நோக்கம் கொண்டவை.
ஜூன் 20 09:00

இலங்கை இராணுவப் புலனாய்வுடன் செயற்பட்டதாகக் கூறிய ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு அமைச்சர்கள் கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதகுருமாருக்கு விசேட சலுகைகளை வழங்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை ஏனைய கைதிகள் போன்றே நடத்த வேண்டும் என கொழும்பில் உள்ள மனித உரிமைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறும், விடுதலைக்கான ஏற்பாடுகள் முடிவடையும் வரை காவியுடையுடன் சிறையில் இருப்பதற்கு அனுமதிக்குமாறும் அமைச்சர்களான் பாட்டாலி சம்பிக்க ரணவக்க, நளின் பண்டார ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூன் 19 17:31

மைத்திரி ரணில் அரசு பற்றி எதுவுமே பேசக் கூடாது- பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கட்டளை என்கின்றார் விக்னேஸ்வரன்

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர்களுக்கான அரசியல் தீர்வு 2018 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு தீர்வு வரும் என்றார். 2017 ஆம் ஆண்டும் தீர்வு வரும் எனக் கூறினார். தற்போது 2018 ஆம் ஆண்டு முடிவடைதற்குள் தீர்வு சாத்தியமாகும் என நம்பிக்கைவேறு வெளியிட்டுள்ளார் சம்பந்தன், என்று சுட்டிகாட்டிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், அரசாங்கம் ஒன்றைக் கூறி மற்றொன்றைச் செய்வதாகவும் தெரிவித்தார்.
ஜூன் 19 09:45

சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலங்களில் முரண்பாடுகள்- மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பாளர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் மல்லாகம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இலங்கைப் பொலிஸார் வாக்கு மூலங்களை சிங்கள மொழியில் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ் மாவட்ட கிளை பணிப்பாளர் கனகராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தமிழ்மொழியில் கூறிய வாக்குமூலங்களுக்கும் சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறினார். அதேவேளை கைதான மூன்று இளைஞர்களும் குற்றவாளிகள் அல்ல என்றும், அவர்கள் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் கையளிப்பதற்காகக் கொண்டு சென்றவர்கள் எனவும் உறவினர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜூன் 18 23:11

உயிரிழந்த இளைஞனின் சடலம், உறவினர்களிடம் 24 மணிநேரத்தின் பின் ஒப்படைப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் மல்லாகம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம், 24 மணி நேரத்தின் பின்னர் இன்று திங்கட்கிழமை இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் குளமங்கால் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான பாக்கியராச சுதர்ஸன் என்ற இளைஞனே நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து முன்னுக்குப் பின்ன முரணான தகவல்களை பொலிஸாரும் சில அதிகாரிகளும் வெளியிடுவதாகவும், இலங்கைப் பொலிஸாரினால், இதுவரை நம்பத் தகுந்த விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
ஜூன் 18 11:09

நீதிபதியுடன் பொதுமக்கள் தர்க்கம். வன்முறைகளை இலங்கைப் பொலிஸார் துாண்டி விடுவதாகவும் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம், மல்லாகம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்ற சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் இருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். அதேவேளை, தெல்லிப்பழை வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சம்பவ இடத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் கிளை அதிகாரிகள் சென்று, பொது மக்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.
ஜூன் 17 23:29

மல்லாகத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி- பொலிஸாருக்கு எதிராக மக்கள் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம், மல்லாகம் பிரதேசத்தில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 வயதுடைய இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்னுமொரு இளைஞன் காயமடைந்துள்ளார். மல்லாகம் சகாயமாதா கோவிலுக்குச் சமீபமாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான காரணங்களும் இன்றி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் கூறிய மக்கள், வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாயமாதா கோவில் பெருநாளில் கலந்துகொள்ள வந்த மக்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூன் 17 04:01

பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய இந்திய மத்திய அரசு விரும்பவில்லை

(சென்னை, தமிழ்நாடு) இந்தியாவி்ன் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு கடந்த 27 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி தமிழக மாநில அரசு அனுப்பிய மனுவை இந்திய ஒன்றிய அரசின் ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் முடிவின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இம்முடிவை எடுத்தாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 16 15:23

தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதான எதிரியான இராணுவ அதிகாரிக்குப் பதவி உயர்வு

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் கொல்லப்பட்டமைக்கும் காரணமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு யாழ் நாவற்குழி முகாமின் பொறுப்பதிகாரியாக இவர் பதவி வகித்தபோது தமிழ் இளைஞர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அது தொடர்பான வழக்கில் இவர் முதலாவது எதிரியாக யாழ் மேல் நீதிமன்றத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
ஜூன் 16 07:09

மலையகத்தில் தமிழச் சிறுவர்கள் கடத்தப்பட்டு விற்கப்படுகின்றமைக்கு எதிராக மக்கள் போராட்டம்

(வவுனியா, ஈழம் ) இலங்கைத் தீவின் மலையகத்தில உள்ள பெருந்தோட்டத்தில் வாழும் தமிழச் சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் இடம்பெறுவதை கண்டித்து தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழச் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர்களின் கல்வி கற்கும் உரிமை, சுதந்திரமாக நடமாடும் உரிமை அரசியல்வாதிகள் மற்றும் முகவர்களினால் பறிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். நுவரேலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை மாலை போராட்டம் இடம்பெற்றது.